பிரபு சாலமனின் ’காடன்’ திரைப்படத்தில் பாகுபலியை விட கஷ்டம் அனுபவித்தேன் - ராணா

பிரபு சாலமனின் ’காடன்’ திரைப்படத்தில் பாகுபலியை விட கஷ்டம் அனுபவித்தேன் - ராணா
  • Share this:
பாகுபலியை விட காடன் திரைப்படத்தில் அதிகம் கஷ்டப்பட்டதாக நடிகர் ராணா தெரிவித்துள்ளார்.

தொடரி படத்தை அடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காடன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகிறது. பாகுபலி படத்துக்குப் பின் நடிகர் ராணா டக்குபதி இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஈராஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.அசோக் குமார், இசையமைப்பாளராக சாந்தனு மொய்த்ரா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் பெரும் பொருட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது.


கடந்த 10-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு, ஏப்ரல் 2-ம் தேதி காடன் திரைப்படம் திரைக்கு வரும் என்று அறிவித்தது. இதையடுத்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் இன்று படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.



அப்போது பேசிய நடிகர் ராணா, “எனக்கு ஆக்‌ஷன் படங்கள் நடிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் காடுகளில் நான் சண்டைக்காட்சிகளில் நடிக்கவில்லை. பாகுபலியை தொடர்ந்து ஒரே வாரத்தில் காடன் திரைப்படத்தில் கஷ்டத்தை அனுபவித்தேன். ராஜமவுலியை விட இயக்குநர் பிரபு சாலமன் என்னை அதிகமாக வேலைவாங்கி விட்டார். இதை நான் ராஜமவுலியிடம் போன் பண்ணி சொல்லியிருக்கிறேன்.10 வருடங்களுக்கு முன்னர் நான் தமிழ்த்திரைப்படங்களில் நடிக்க முயற்சித்து பிரபுசாலமனிடம் கூட வாய்ப்பு கேட்டிருக்கிறேன். அதற்கேற்ற நேரம் வரவில்லை. காடன் கதை அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் எனக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய வரம்.  படப்பிடிப்பின் போது ஜாலியாக இருந்தது என்றால் அதற்கு விஷ்ணு விஷால் தான் காரணமாக இருக்கமுடியும்” என்றார்.

மேலும் படிக்க: 100 அரசுப் பள்ளிக் குழந்தைகளுடன் ஆகாயத்தில் வெளியாகும் சூரரைப் போற்று ‘சிங்கிள்’!
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்