ரஜினிகாந்த் - கே.எஸ்.ரவிக்குமார் திடீர் சந்திப்பு... 168-வது படம் குறித்து ஆலோசனை?

news18
Updated: April 9, 2019, 12:06 PM IST
ரஜினிகாந்த் - கே.எஸ்.ரவிக்குமார் திடீர் சந்திப்பு... 168-வது படம் குறித்து ஆலோசனை?
ரஜினிகாந்த்- கே.எஸ்.ரவிக்குமார்
news18
Updated: April 9, 2019, 12:06 PM IST
ரஜினிகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.

ரஜினிகாந்த் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் வெளியான படையப்பா, முத்து உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிப்படங்களாக அமைந்தன. சமீபகாலமாக பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இளம் இயக்குநர்களின் படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த், தற்போது ஏ.ஆர்.முருகதாஸுடன் ‘தர்பார்’ படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை மும்பையில் தொடங்குகிறது. அதற்காக இன்று மும்பை செல்கிறார் ரஜினிகாந்த்.இந்நிலையில் இன்று ரஜினிகாந்தை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்த கே.எஸ்.ரவிக்குமார் ஒரு மணி நேரமாக ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் உருவாக்கி வரும் கதையை ரஜினியிடம் கூறியதாகவும், ‘தர்பார்’ படம் முடிந்த பிறகு ஒப்பந்தம் செய்யலாம் என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கே.எஸ்.ரவிக்குமாரை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார்.

ஏற்கெனவே நடிகர் ரஜினிகாந்த் - கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்து பணியாற்ற இருந்த நிலையில் அதற்கான வாய்ப்புகள் அமையாமல் போனது. ‘தர்பார்’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தும் கே.எஸ்.ரவிக்குமாரும் இணைந்து 168-வது திரைப்படம் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

வீடியோ பார்க்க: கமல்ஹாசன் உடன் சிறப்பு நேர்காணல்


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...