ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தமிழ் சினிமாவில் கருத்தியல், வணிகம் இரண்டிலும் வென்ற ஒரே படம் 'ஜெய் பீம்' - கே.பாலகிருஷ்ணன்!

தமிழ் சினிமாவில் கருத்தியல், வணிகம் இரண்டிலும் வென்ற ஒரே படம் 'ஜெய் பீம்' - கே.பாலகிருஷ்ணன்!

ஜெய்பீம் படக்குழுவினருக்கு பாராட்டு விழா

ஜெய்பீம் படக்குழுவினருக்கு பாராட்டு விழா

தான் வன்னியர் என்பதால்தான் தைரியமாக , கம்பீரமாக ராஜாக்கண்ணு வழக்கை ஏற்று நடத்தினேன் என கூறுமாறு குறிப்பிட்ட அமைப்பினர் நெருக்கடி தந்தனர் என்று மார்க்சிஸ்ட் நிர்வாகி கோவிந்தன் தெரிவித்தார்.

  • News18
  • 3 minute read
  • Last Updated :

தமிழ் சினிமாவில் கருத்தியல், வணிகம் இரண்டிலும் வென்ற ஒரே படம் 'ஜெய் பீம்' தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த 'ஜெய் பீம் ' திரைப்படத்தின் கலைஞர்களுக்கும் , படத்தின் மையக் கருவாக அமைந்த மறைந்த ராஜாக்கண்ணு குடும்பத்தினருக்கு உதவிய  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகளுக்கும் அக்கட்சி சார்பில் பாராட்டு விழா சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் , ஜி.ராமகிருஷ்ணன் , வாசுகி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், ஜெய்பீம் படக்குழுவினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேடயம் வழங்கி கௌரவித்தார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ண பேசுகையில், கம்யூனிஸ்ட் நீண்ட நெடிய போராட்ட வரலாற்றின் ஒரு அத்தியாயத்தை படமாக்கிய ஜெய்பீம் படக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

படத்தில்  ராஜா கண்ணுவாக நடித்த மணிகண்டன் பத்திரியாளர்கள் மத்தியில் பேசும்போது, இந்த வழக்கை நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் மன உறுதியை கண்டு வியந்து போனேன். அவர்கள் மக்களின் போராட்டத்திற்காக 90% ஒதுக்குகிறர்கள். தங்களது  குடும்பத்திற்காக 10 % தான்ஒதுக்குகிறார்கள் என்று கூறினார்.அது உண்மை தான்.மக்கள் வாழ்வதற் காக  போராடுவார்கள்.ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியினர் போராடுவதற்காக வாழ்பவர்கள் என்றார்.

அவரைத் தொடர்ந்து இயக்குநர் ஞானவேல் பேசுகையில், கலை மக்களுக்கானது என நான் உணர பல இடதுசாரி படைப்புகள் காரணமாக இருந்தது. கம்யூனிச இயக்கத்தை படமாக்கவேண்டும் என்பது எனது  நோக்கமல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி கதை எழுதும்போது கதைக்குள் அவர்கள்  வந்துவிட்டனர். கடலூரில் 1993 முதல் 1996 வரை  இதுபோல கம்யூனிச இயக்கங்கள் மூலம் 12 வழக்குகள் நடத்தியுள்ளன. 60 இருளர் கிராமங்களை சென்று பார்த்தேன், அங்கு பல ராஜாக்கண்ணுகள் இருக்கின்றனர்.

ஒடுக்குமுறைக்கு எதிரான  முழக்கமாக ஜெய்பீம் இருந்ததால் அதை படப்பெயராக வைத்தேன்.

30 ஆண்டுக்கு பிறகு இப்படத்தின் மூலம் உண்மையை போஸ்ட் மார்டம் செய்துள்ளோம். படத்தில் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் படங்களை காட்டியிருந்தேன். கருப்பு, நீலம், சிவப்பு இணைந்தால் தான் இந்தியாவை ஜனநாயகமாக்க முடியும். காப்பாற்ற முடியும். என்றும் அவர் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய கே.பாலகிருஷ்ணன், பார்வதி படிப்பறிவற்ற ஆதிவாசி குறவர் சமூக பெண், களப்போராளிகளில் அதிகம் பாராட்டப்பட வேண்டியவர் அவர். இந்த வழக்கை நடத்திய 2 காவல் நிலையத்தில் பாம் வெடித்தது, அதற்கு கம்யூனிஸ்ட் கட்சிதான் காரணம் என்று கூறினர். அனைத்து காவலர்களையும் குற்றம் சொல்லவில்லை, தவறு செய்பவர்களுக்கு தண்டனை தர வேண்டும் என்றே கூறுகிறோம்.

வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரம் மிக சிறப்பாக காட்டப்பட்டுள்ளது, இறந்த ராஜாக்கண்ணுவின் உடல் கிடைக்கவில்லை, பார்த்த சாட்சியும் கிடையாது என்பதுதான் வழக்கை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. வழக்கறிஞர் வெங்கட்ராமன் சிறப்பாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்தார்.

அடித்தட்டு மக்களின் நீதிக்கான படமாக இருப்பதால் பலரும் இடையூறு செய்தனர் , எதிர்காலத்திலும் இதுபோல வரும் படங்களுக்கு இடையூறு செய்யப்பட்டால் அவர்களை எதிர்த்து களப்போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் தயங்காது. தமிழகத்தில் கருத்தியல், வணிகம் இரண்டிலும் வென்ற முதல் படம் ஜெய்பீம்.

தண்டனைக்குள்ளான காவல்துறை அதிகாரி அந்தோணிசாமியை நான் சிறையில் இருந்தபோது பார்த்தேன். உங்களால் சிறைக்கு அனுப்பப்பட்ட காவலர் நான் தான் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சிறைக்கு வராமல் இருந்தால் 2ஆண்டுகள் முன்பே  இறந்திருப்பேன், மது அருந்தாமல் இருந்தால் கை கால் நடுங்கும் சிறைக்கு வந்ததால் இப்போதுவரை வாழ்கிறேன் அதற்காக நன்றி என்று கூறினார்.

இந்த படத்தை தயாரித்து,  நடிக்க சூரியா ஒப்புக்கொண்டது அவரது நல்ல சிந்தனையை காட்டுகிறது. திரையுலகிற்கும் நமக்கும் சம்பந்தமில்லை, அது போர்க்களம் போல இருப்பதை இப்போதுதான் உணர்கிறேன். பவா செல்லதுரை எனது கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறியவுடன் ஆச்சரியப்பட்டேன்.

மேற்கு வங்க சத்யஜித்ராய் போல  ஞானவேலும் வருவார். அசுரன் , பரியேறும் பெருமாள், மாநாடு, ஜெயில், ஆன்டி இந்தியன் என்று ஜனநாதன் முதல் ஞானவேல் வரை புதிய சிந்தனையோடு வந்துள்ளனர். திரைப்படங்களில் படக்குழுவினரை கட்சி மேடையில் பாராட்டுவதில் எங்களுக்கு தயங்கம் இருந்தது என்றாலும்  குறிப்பிட்ட கட்சியினர் படக்குழுவினருக்கு இடையூறு செய்து மிரட்டும் போது,  பக்க பலமாக இருப்பதை காட்டத்தான் பாராட்டு விழா.

Also read... தமிழகத்தில் ஆக்சிஜன் வசதி இரு மடங்காக உயர்வு - அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி!

தமிழ் திரையுலகம் வேகமாக மாறி வருகிறது, முன்னேறியுள்ளது. இது சினிமாவில் ஏற்பட்ட திருப்புமுனை மட்டுமல்ல,  தமிழகத்தின் மாற்றாக இடதுசாரி இயக்கம் வலுவடையும் என்பதையும் காட்டுகிறது என்றார்.

Also read... அவினாசியில் மசூதி விரிவாக்கம் செய்யும் பணிக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை...!

அவரைத் தொடர்ந்து வழக்கை நடத்திய சிபிஎம் ஒன்றிய பொறுப்பாளர் கோவிந்தன் பேசுகையில், எனது கிராமத்தில் பெரும்பான்மையாக இருந்த வன்னியர் சமூக  மக்கள் இந்த வழக்கில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இருந்தனர்.

ராஜக்கண்ணுவுக்கு பொய்யாக மருத்துவ சான்றிதழ் வழங்கிய மருத்துவர் தற்போது கருக்கலைப்பு விவகாரத்தில் சிக்கி சிறையில் இருக்கிறார் , செய்த பாவத்திற்கு அவர் தண்டனை அனுபவித்து வருகிறார்.

படம் வெளிவந்த பிறகு குறிப்பட்ட அமைப்பினர் இந்த வழக்கை நடத்திய நான் வன்னியர் என்பாதல்தான் கம்பீரமாக , தைரியமாக நடத்தினேன் என்று கூறுமாறு நெருக்கடி கொடுத்தார்கள். ஆனால் நான் பிறப்பால் வன்னியர் சாதி என்றாலும் மத இன மொழிக்கு அப்பாற்பட்ட சாதிக்கு சத்பந்மில்லாத  மார்க்ஸ் தத்துவத்தால் வளர்க்கப்பட்டவன் என்று கூறியதாக தெரிவித்தார்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Jai Bhim