ஜோதிகாவின் ‘ராட்சசி’ சூப்பர் ஹிட்! - தயாரிப்பாளர் அறிவிப்பு

Web Desk | news18
Updated: July 8, 2019, 7:29 PM IST
ஜோதிகாவின் ‘ராட்சசி’ சூப்பர் ஹிட்! - தயாரிப்பாளர் அறிவிப்பு
ராட்சசி படத்தில் ஜோதிகா
Web Desk | news18
Updated: July 8, 2019, 7:29 PM IST
இந்த வாரம் வெளியான தமிழ்ப் படங்களில் ராட்சசி அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் கவுதம் ராஜ் இயக்கியுள்ள படம் ராட்சசி. ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் ஜூலை 5-ம் தேதி திரைக்கு வந்தது.

பள்ளிக் கல்வியின் அவசியத்தையும் அரசு பள்ளிகளில் நிகழவேண்டிய மாற்றத்தையும் பேசியுள்ள இந்த திரைப்படம், கடந்த ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலிலும் சாதனை படைத்துள்ளது.


படத்தின் வெற்றி குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, முதல் நாளில் கிடைத்த வசூலை விடவும் சனிக்கிழமையன்று 40% அதிக வசூல் கிடைத்தது. இது படம் சூப்பர் ஹிட்டானதை எடுத்துரைக்கிறது. ரசிகர்களை சந்தோஷப்படுத்த நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: ஆஸ்கர் விருதுகளைத் தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்ற இந்திய இயக்குநர்கள்!

First published: July 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...