நடிகை ஜோதிகா முன்னணி நடிகர் ஒருவருக்கு சகோதரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ரசிகர்களை வெகுவாக கவர்ந்த கேஜிஎப் படம் மூலம் பிரபல இயக்குநராக மாறியவர் பிரசாந்த் நீல். இவர் தற்போது கேஜிஎப்-2 படத்தை இயக்கி முடித்துவிட்டு, தற்போது சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், ஸ்ருதிஹாசன் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகை ஜோதிகா சலார் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். படத்தில் அவர் பிரபாஸுக்கு சகோதரியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு கார்த்தி நடித்த தம்பி படத்தில் அவருக்கு அக்காவாக நடித்திருந்தார். திருமணத்துக்குப் பிறகு சிறிது இடைவெளி விட்டிருந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார். அதன் பிறகு தான் நடிக்கும் கதாபாத்திரங்களை மிக நேர்த்தியாக தேர்வு செய்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம்
பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில்
சினிமா ரசிகர்களை கவர்ந்த பிரபாஸ், தற்போது ராதே ஷ்யாம், சலார், ஆதிபுருஷ் ஆகியப் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.