பிரகதீஸ்வரர் கோயிலுக்கு எதிராக நடிகை ஜோதிகா பேசியதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற விருது விழா ஒன்றை தனியார் சேனல் சமீபத்தில் ஒளிபரப்பியது. அந்த வீடியோவின் சில பகுதிகளை சமூகவலைதளத்தில் வெளியிட்டு ஜோதிகாவின் பேச்சுக்கு எதிராக பலர் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வீடியோவில் ஜோதிகா பேசியிருப்பதாவது, பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது, அழகாக இருக்கும். கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கெனவே பார்த்துள்ளேன். மிகவும் அழகாக உள்ளது. உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி நன்கு பராமரித்து வருகிறார்கள்.
அடுத்த நாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் இருந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் கண்டதை என் வாயால் சொல்ல முடியாது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை. ‘ராட்சசி’ படத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார்.
கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.
நான் கோவிலுக்குள் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று கூறியுள்ளார்.
ஜோதிகாவின் இந்தப் பேச்சை பதிவிட்டு கருத்து தெரிவித்திருக்கும் நடிகர் எஸ்.வி.சேகர், ஜோதிகா 100 % மெச்சூரிட்டி இல்லாத பேச்சு .கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று.
இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம். கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம். உங்கள் மாமனாரிடம் கேளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.