சிவா இயக்கும் ரஜினி படத்தில் 2 ஹீரோயின்கள்!

சிவா இயக்கும் ரஜினி படத்தில் 2 ஹீரோயின்கள்!
ரஜினிகாந்த் | சிவா
  • News18
  • Last Updated: October 15, 2019, 9:11 PM IST
  • Share this:
ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்குகிறார். விஸ்வாசம் படத்தை அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க இருந்த சிவா, தற்போது ரஜினியின் 168-வது படத்தை இயக்க உள்ளார்.

இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் படத்தில் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதில் நடிகை ஜோதிகா ஏற்கெனவே சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். அதேவேளை நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிகாந்துடன் நடிக்கும் முதல் படம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினிகாந்த் சென்னை திரும்பியதும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. தர்பார் படத்தின் ஷூட்டிங்கை முடித்து தற்போது ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுள்ளார் ரஜினிகாந்த் . அவர் சென்னை திரும்பியதும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

வீடியோ பார்க்க: பிகில் உருவான கதை
First published: October 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading