5G Network: இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்ற நடிகை

ஜூஹி சாவ்லா

5ஜி அலைக்கற்றைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று ஜூஹி சாவ்லா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

  • Share this:
    5ஜி அலைக்கற்றையை இந்தியாவில் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளார் நடிகை ஜூஹி சாவ்லா.

    இந்தியின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஜூஹி சர்வலா. தமிழில் 1991-ல் ரஜினி நடித்த நாட்டுக்கொரு நல்லவன் படத்தில் நடித்தார். மலையாளத்தில் ஹரிகிருஷ்ணன்ஸ் படத்தில் மம்முட்டி, மோகன்லாலுடன் நடித்தார். இது தவிர தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தயாரித்த தி ஹண்ட்ரட் பூட் ஜர்னி படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றினார். இவையெல்லாம் உதிரி. அதிகம் நடித்தது இந்தியில் தான். இப்போதும் இந்திப் படங்களில் நடிக்கிறார். இவர் சுற்றுச்சூழல் ஆர்வலரும் கூட.

    5ஜி அலைக்கற்றைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று ஜூஹி சாவ்லா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 4ஜி அலைக்கற்றையைவிட 5ஜி அலைக்கற்றையின் கதிர்வீச்சு 100 மடங்கு அதிகம், அதனால் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். எனவே அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். தொலைபேசி டவர்கள் காரணமாக சிட்டுக்குருவி இனம் அழிந்து போனதாக ஒரு குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது.

    ஆனால், அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்கப்படாத நிலையில், இதை வைத்தே 2.0 படத்தை எடுத்தார் ஷங்கர். இப்போது ஜூஹி சாவ்லா அதே குற்றச்சாட்டுடன் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: