முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜூனியர் என்டிஆரை நெகிழ வைத்த ஜப்பான் ஓட்டல் ஊழியர்

ஜூனியர் என்டிஆரை நெகிழ வைத்த ஜப்பான் ஓட்டல் ஊழியர்

ஜூனியர் என்டிஆர்

ஜூனியர் என்டிஆர்

RRR படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் 1920-களில் அமைந்த கற்பனை கதையாகும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜூனியர் என்டிஆர் RRR பட புரொமோஷனுக்காக ஜப்பான் சென்றபோது, நேபாளி ஒருவர் அவரை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

தனது குடும்பத்துடன் ஜப்பானில் இருக்கும் நடிகர் ஜூனியர் என்டிஆரை, அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் ஹவுஸ் கீப்பிங் ஊழியர் ஒருவர் இதயப்பூர்வமான குறிப்பு மூலம் வரவேற்றார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

ஜூனியர் என்டிஆர் தனது மனைவி மற்றும் குழந்தைகள், ராம் சரண் மற்றும் திரைப்பட இயக்குநர் SS.ராஜமௌலி ஆகியோருடன் RRR படத்தின் விளம்பரங்களுக்காக புதன்கிழமை ஜப்பான் வந்தடைந்தார். இந்தப்படம் வெள்ளிக்கிழமை ஜப்பானில் வெளியாகிறது. ஹோட்டல் ஊழியருடன் என்டிஆர் இருக்கும் கிளிப்பில், அந்த நேபாளி பெண் ஊழியருடன் என்டிஆர் பேசுவதை காண முடிகிறது.

23 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த பப்லு பிரித்விராஜ்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

RRR படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் 1920-களில் அமைந்த கற்பனை கதையாகும். ராஜமெளலி இயக்கத்தில் உருவான இந்த 'ரத்தம் ரணம் ரெளத்திரம்' படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்திருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் வெளியானது.

First published:

Tags: Telugu movie