முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெறும் நடிகர் - மருத்துவமனை அறிக்கை - சோகத்தில் தெலுங்கு ரசிகர்கள்

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெறும் நடிகர் - மருத்துவமனை அறிக்கை - சோகத்தில் தெலுங்கு ரசிகர்கள்

நந்தமுரி தாரக ரத்னா

நந்தமுரி தாரக ரத்னா

நடிகர் ஜுனியர் என்டிஆர் விரைவில் மருத்துவமனைக்கு வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் நடிகருமான என்டிஆரின் பேரனும், ஜுனியர் என்டிஆரின் உறவினருமான நந்தமுரி தாரக ரத்னா நேற்று தெலுங்கு கட்சியின் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்தார்.

அப்போது மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்த அவரை உடனடியாக ஆந்திர பிரதேசத்தில் உள்ள குப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனையின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

அதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தொடர்ந்து போராடிவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் ஜுனியர் என்டிஆர் விரைவில் மருத்துவமனைக்கு வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது.

நந்தமுரி தாரக ரத்னா தெலுங்கில் வில்லன் வேடத்திலும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துவருகிறார். அவர் நடிப்பில தற்போது சாரதி என்ற படம் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor, NTR