வசன உச்சரிப்பிலும் பாடி லாங்வேஜிலும் ஸ்டைல் காட்டி அக்கால தமிழ் திரையை ஆச்சரியப்பட வைத்த மந்திரக் கலைஞன் சந்திரபாபுவின் திரைப்பயணம் பற்றிய சிறப்பு பதிவு.
1950 முதல் 1970 வரை தமிழ் திரையுலகில் ஒரு காமடியனாய், குணச்சித்திர நடிகராய், நாயகனாய்,, பாடகனாய் ரசிக்க வைத்தவர் சந்திரபாபு. சினிமாவின் இரும்பு கதவை தட்ட ஆரம்பித்து பெரும் போராட்டங்களுக்கு பின் ‘தன அமராவதி’ என்ற திரைப்படத்தில் 1947 ஆம் ஆண்டு வெள்ளி திரையில் அறிமுகமானார் 'சபாஷ் மீனா' சந்திரபாபுவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அத்திரைப்படத்தில் ஹீரோ
சிவாஜியா, சந்திரபாபுவா? என கேட்குமளவுக்கு இரண்டு கதாபாத்திரங்களில் பம்பரமாய் சுழன்றிருப்பார் சந்திரபாபு.
கணவர் வித்யாசாகர் இல்லாத முதல் திருமண நாள்.. கலங்க வைக்கும் மீனாவின் பதிவு!
சிவாஜி கணேசனுடன் ‘புதையல்’ எம்ஜிஆருடன்’ நாடோடி மன்னன்’ ஜெமினிகணேசனுடன் ‘மாமன் மகள்’ என முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்து மிக விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகனுமானார்.

சந்திரபாபு
ராக் அண்ட் ரோல் நடனம் ஆடுவது, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவது. ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்ப்பது .. ஒருவரை அழைக்கும் போது மிஸ்டர் மிஸ்ஸஸ் என சொல்லி அழைப்பது இவரின் ஸ்பெஷாலிட்டி ஆனது. அதோடு மெட்ராஸ் பாஷையை சிறப்பாகக் கையாளுவதில் பி.ச்.டி முனைவர் என்றே சந்திரபாபுவை சொன்னது திரையுலகம். ‘சகோதரி’ திரைப்படத்தில் சந்திரபாபு ஏற்று நடித்திருந்த பால்காரன் கதாபாத்திரத்தை பார்த்துத்தான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்பதை தமிழகம் உணர்ந்தது.
தயவு செய்து இதுபோல் விளம்பரம் செய்யாதீர்கள். கோபத்தில் நடிகர் யோகி பாபு! என்ன காரணம்?
ஒரு பாடகராகவும், ஆடல் கலையில் அசத்துபவராகவும் அன்றைய சகலகலாவல்லவரானார் சந்திரபாபு. இந்துஸ்தானி பாரம்பரிய இசையுடன் ராக் அண்ட் ரோல் இசை வடிவத்தை கலந்துகட்டி இவர் ஆட்டம் போட்ட " குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே " பாடல் பட்டி தொட்டியெங்கும் அலறியது.
‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘பிறக்கும் போது அழுகிறான்’, ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’, ‘ஒண்ணுமே புரியல உலகத்தில’, ‘பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’, ‘என்னை தெரியலையா இன்னும் புரியலையா’ போன்ற பாடல்கள் இன்றும் சொல்லும் சந்திரபாபு என்ற கலைஞனின் சிறப்பை..
‘‘கவலை இல்லாத மனிதன்’ மற்றும் ‘குமாரராஜா’ போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் உருவமெடுத்தார். சந்திரபாபு. அவர் இயக்கி தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து வெளிவந்த ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்னும் திரைப்படத்தின் தோல்வி… எம்,ஜி.ஆர்” நடிப்பில் அவர் திட்டமிட்ட “மாடிவீட்டு ஏழை'' கைவிடப்பட்டது போன்ற சிக்கல்கள் சந்திரபாபுவின் ராக் அண்ட் ரோல் கால்களை தள்ளாட செய்தது. 'நான் தூங்கப் போகிறேன், நீ போய்படு' என்று வேலைக்கார சிறுவனிடம் கூறி விட்டு இறுதியாய் தூங்கி போனார் சந்திரபாபு. நிஜம் மட்டுமே பேசத் தெரிந்த நிஜக் கலைஞனான சந்திரபாபுவை என்றும் மறவாது குங்கும பூவும் கொஞ்சு புறாவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.