ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆசியாவின் சிறந்த நடிகர்! 'மின்னல் முரளி'யில் கலக்கிய குருசோமசுந்தரத்துக்கு கிடைத்த கெளரவம்!

ஆசியாவின் சிறந்த நடிகர்! 'மின்னல் முரளி'யில் கலக்கிய குருசோமசுந்தரத்துக்கு கிடைத்த கெளரவம்!

மின்னல் முரளி படத்தில் டொவினோ தாமஸுடன் குரு சோமசுந்தரம்

மின்னல் முரளி படத்தில் டொவினோ தாமஸுடன் குரு சோமசுந்தரம்

ஜோக்கர் படத்தில் குரு சோமசுந்தரம் ‘மன்னர் மன்னன்’ என்ற கேரக்டரில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த படம் 2 தேசிய விருதுகள் உள்பட 12 விருதுகளை தட்டிச் சென்றது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆசியாவின் சிறந்த நடிகராக ‘மின்னல் முரளி’ படத்தில் நடித்து, ரசிகர்களை கவர்ந்த குரு சோமசுந்தரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  ‘ஏசியன் அகடமிக் கிரியேட்டிவ்’ என்ற விருது ஆண்டுதோறும் ஆசியாவை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

  சிறந்த நடிகர், நடிகை, இயக்கம், ஒளிப்பதிவு உள்பட பல்வேறு பிரிவுகளில் 16 நாடுகளைச் சேர்ந்த படங்கள் இந்த விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்தன, இந்நிலையில் மின்னல் முரளி என்ற மலையாள படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் குரு சோமசுந்தரத்திற்கு, ஆசியாவின் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  குரு சோமசுந்தரம்

  இந்தப் படத்தை பாசில் ஜோசப் இயக்கி இருந்தார். பிரபல நடிகர் டொவினோ தாமஸ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். மின்னல் முரளி திரைப்படம் மலையாளத்தில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றதுடன், பல்வேறு விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

  Ravindar: நம்ம மேல வந்த பஞ்சாயத்து எல்லாம் முடிஞ்சது... இனி நம்ம பண்ணுவோம் - அதிரடியாக களமிறங்கிய ரவீந்தர்!

  இந்த படத்தில் ஹீரோவாக நடித்த டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரத்தை பாராட்டி பேசியிருந்தார். அவர் தனக்கு நல்ல நண்பர் மட்டுமல்ல, சிறந்த வழிகாட்டி என்றும் டொவினோ தாமஸ் கூறியிருந்தார்.

  ஜோக்கர் படத்தில் குரு சோமசுந்தரம் ‘மன்னர் மன்னன்’ என்ற கேரக்டரில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த படம் 2 தேசிய விருதுகள் உள்பட 12 விருதுகளை தட்டிச் சென்றது.

  Nayanthara Vignesh Shivan: இதே மாதிரி ஃபாஸ்ட்டா AK62 ரிலீஸ் பண்ணுங்க... விக்னேஷ் சிவனிடம் கோரிக்கை வைத்த அஜித் ரசிகர்!

  மின்னல் முரளியில் ஷிபு என்ற கேரக்டரில் சோமசுந்தரம் நடித்துள்ளார். ஆசியாவின் சிறந்த நடிகருக்கான விருதை, டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட விழாவில், குரு சோமசுந்தரம் பெற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஆசியாவைச் சேர்ந்த பல்வேறு திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood