Home /News /entertainment /

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஜோஜு ஜார்ஜின் புதிய படம்..

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஜோஜு ஜார்ஜின் புதிய படம்..

மதுரம்

மதுரம்

கிறிஸ்மஸை முன்னிட்டு டிசம்பர் 24 ஆம் தேதி மதுரம் சோனிலிவ் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது.

மலையாளத்தின் முக்கிய நடிகர்களில் ஒருவரான ஜோஜு ஜார்ஜின் புதிய படம் மதுரம் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது. ஓடிடி-ஐ அதிகம் பயன்படுத்திக் கொள்ளும் திரையுலகு என்று மலையாள சினிமாவை சொல்லலாம். மோகன்லால், பகத் பாசில், பிருத்விராஜ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஓடிடியில் வெளியாகின்றன. அதுவும் தொடர்ச்சியாக. அஹமது கபீர் இயக்கியிருக்கும் மதுரம் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகிறது.

சமீபத்தில் வெளிவந்த லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் சுருளி படத்தில் நடித்திருந்த ஜோஜு ஜார்ஜ், ஜாஃபர் இடுக்கி இருவரும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ஹோம் படத்தின் நாயகன் இந்திரன்ஸும் இதில் நடித்துள்ளார். இவர்களுடன் அர்ஜுன் அசோகன், நிகிலா விமல் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கிறிஸ்மஸை முன்னிட்டு டிசம்பர் 24 ஆம் தேதி மதுரம் சோனிலிவ் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது. இதேநாளில் டொவினோ தாமஸ் நடித்திருக்கும் மலையாளத்தின் முதல் சூப்பர்ஹீரோ படமான மின்னல் முரளி நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

also read : மகனுடன் மகான் டப்பிங்கை முடித்த விக்ரம்..

பண்டிகை தினங்களில் நடிகர்களின் படங்கள் போட்டிப் போட்டு வெளியாவது போன்று ஓடிடியும் இப்போது போட்டிப் போட்டு படங்களை வெளியிடுகின்றன. கிறிஸ்மஸுக்கு நெட்பிளிக்ஸுக்கு மின்னல் முரளி. சோனிலிவ்வுக்கு மதுரம். விரைவில் டிஸ்னி, அமேசான் போன்றவையும் தங்களது எஸ்க்ளூஸிவ் வெளியீடுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Movie, OTT Release

அடுத்த செய்தி