முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Watch: இரட்டை வேடத்தில் கலக்கும் ஜோஜு ஜார்ஜ்! வெளியானது இரட்டா ட்ரைலர்!

Watch: இரட்டை வேடத்தில் கலக்கும் ஜோஜு ஜார்ஜ்! வெளியானது இரட்டா ட்ரைலர்!

ஜோஜு ஜார்ஜ்

ஜோஜு ஜார்ஜ்

தேசிய விருது பெற்றுள்ள ஜோஜு ஜார்ஜின் கேரியரில் மற்றுமொரு திருப்புமுனை படமாக இது அமையும் என்பதை ட்ரைலர் உறுதிப்படுத்துகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜோஜு ஜார்ஜ், அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இரட்டா'.  இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ்  இரட்டை சகோதரர்கள்  வினோத் மற்றும் பிரமோத்  என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்தப் படத்தை மார்ட்டின் பிரகாட் பிலிம்ஸ் மற்றும் சிஜோ வடகன் ஆகியோருடன் இணைந்து ஜோஜு ஜார்ஜ் இப்படத்தை தயாரிக்கின்றனர். தேசிய விருது பெற்றுள்ள ஜோஜு ஜார்ஜின் கேரியரில் மற்றுமொரு திருப்புமுனை படமாக இது அமையும் என்பதை ட்ரைலர் உறுதிப்படுத்துகிறது. பல படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்திருக்கும் ஜோஜுவின் கேரியரில் இன்னொரு பவர்ஃபுல் போலீஸ் ரோலாக இருக்கும் என்பதை சந்தேகமே இல்லாமல் சொல்லலாம்.

' isDesktop="true" id="876540" youtubeid="OIMILWxADV0" category="cinema">

'இரட்டா' படத்தில் ஜோஜு ஜார்ஜ், அஞ்சலி தவிர, ஸ்ரிந்தா, ஆர்யா சலீம், ஸ்ரீகாந்த் முரளி, சாபுமோன், அபிராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீர் தாஹிர், ஷைஜு காலித், கிரீஷ் கங்காதரன் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். அன்வர் அலியின் மற்றும் முஹாசின் பராரி பாடல் வரிகள் எழுத மலையாளத்தில் பல ஹிட் பாடல்களை கொடுத்த ஜேக்ஸ் பிஜோ இசை அமைக்கிறார். மனு ஆண்டனி படத்தின் எடிட்டர் ஆக உள்ளார். ஆர்ட் ஒர்க் திலீப் நாத், ஆடை வடிவமைப்பு சமீரா சனீஷ், ஒப்பனை ரோனெக்ஸ், சண்டை காட்சிகளை கே.ராஜசேகரின் இயக்கி உள்ளார்.

First published:

Tags: Actress Anjali, Cinema