ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஜீவி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…

சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஜீவி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…

தமிழ்சினிமாவில் இத்தனை நேர்த்தியான இரண்டாவது பாகம் இதுவரை வெளிவந்திருக்காது என்ற அளவில் ஜீவி2 திரைப்படம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்சினிமாவில் இத்தனை நேர்த்தியான இரண்டாவது பாகம் இதுவரை வெளிவந்திருக்காது என்ற அளவில் ஜீவி2 திரைப்படம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்சினிமாவில் இத்தனை நேர்த்தியான இரண்டாவது பாகம் இதுவரை வெளிவந்திருக்காது என்ற அளவில் ஜீவி2 திரைப்படம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி உள்ள ஜீவி 2 திரைப்படத்தின் முதல் தோற்றம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. கோபிநாத் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் வெளியான ஜீவி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முக்கோண விதியை மையமாக வைத்து உருவாகி இருந்த இந்த திரைப்படம் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகரான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டதாக அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்நிலையில் முதல் பாகத்தின் திரைக்கதை தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் தயாராகி உள்ளது. முதல் பாகத்தின் இறுதியில் வெற்றியும் கருணாகரனும் ஷேர் ஆட்டோவில் அமர்ந்திருக்க கதை முடிந்திருக்கும்.

இரண்டாவது பாகம் அந்த ஷேர் ஆட்டோ மீண்டும் துவங்குவதில் ஆரம்பம் ஆகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  தமிழ்சினிமாவில் இத்தனை நேர்த்தியான இரண்டாவது பாகம் இதுவரை வெளிவந்திருக்காது என்ற அளவில் ஜீவி2 திரைப்படம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - KRK Trailer: ஐ லவ் யூ டூ, ஐ மேரி டூ... காத்து வாக்குல ரெண்டு காதல் ட்ரைலர்!

8 தோட்டாக்களுக்கு பிறகு நடிகர் வெற்றி, மீண்டும் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் கதாநாயகன் வெற்றி, கடை ஒன்றில் பணியாளராக வேலை செய்வார். அவருக்கு ஏற்படும் காதல் தோல்வி, வாழ்வில் முன்னேற்றமில்லாமை போன்றவற்றால் அவருக்கு ஏற்படும் மன அழுத்தம் ஆகியவை முதற்பாதி கதையில் நகரும்.

இதையும் படிங்க - KGF 2: பேமிலி ஆடியன்சால் மகுடத்தை இழக்கும் கேஜிஎப் சேப்டர் 2

ஒரு நாள் அவரும் அவர் நண்பர் கருணாகரனும் இணைந்து அவர்களது வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருந்து நகைகளை கொள்ளையடித்து அதனை மறைக்க முயல்வார்கள்.  அதனால் ஏற்படும் பின் விளைவுகளே இந்த படத்தின் மீதிக்கதை. சஸ்பென்ஸ் திரில்லருக்கு தேவையான திரைக்கதையால் ஜீவி திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தது.

ஜீவி 2 படத்தின் எடிட்டராக பிரவின் கே.எல்லும், DOPயாக பிரவீன் குமாரும் பணியாற்ற, சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

Published by:Musthak
First published:

Tags: Tamil Cinema