தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருந்த வாரிசு படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் குடும்ப பார்வையாளர்களின் ஆதரவால் இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்றுவருவதாக கூறப்படுகிறது. இதுவரையில் இந்தப் படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து லோகேஷ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் லியோ படத்தில் விஜய் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகின்றனர். லியோ படத்துக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
அடுத்ததாக விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 68 படத்தை இயக்குநர் அட்லி இயக்குவார் என்றும் வாரிசு படத்தை இயக்கிய வம்சியே மீண்டும் விஜய்யுடன் இணையவிருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் பரவிவருகின்றன.
Muzhgatha ship aa friendship than!!#Jillanesan. Heard is new script from for thalapathy @actorvijay
Phenomenal
Hope thalapathy accepts and the movie materializes!!
Attakasam if it happens for thalapathy fans!! pic.twitter.com/SgGppSa09w
— Badri Venkatesh (@dirbadri) February 7, 2023
இந்த நிலையில் பானா காத்தாடி, செம போத ஆகாதே, பிளான் பண்ணி பண்ணனும் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சுவாரசியத் தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், தனது நண்பரான ஜில்லா பட இயக்குநர் நேசனை சந்தித்தபோது தளபதி விஜய்க்காக அவர் எழுதியுள்ள கதையை கேட்டதாகவும் அந்த கதை மிகச் சிறப்பாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தக் கதையில் நடிக்க விஜய் நடிப்பார் என நம்பிக்கை இருப்பதாகவும் அது நடந்தால் தளபதி ரசிகர்களுக்கு அட்டாகசமான படம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Thalapathy Vijay