முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பூஜையுடன் தொடங்கியது ஜீவா நடிக்கும் புதிய திரைப்படம்

பூஜையுடன் தொடங்கியது ஜீவா நடிக்கும் புதிய திரைப்படம்

நடிகர் ஜீவா

நடிகர் ஜீவா

Jiiva | எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் இரண்டாவது முறையாக நடிக்கும் ஜீவா 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீவா தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் புதிய திரைப்படம் இன்று பூஜை உடன் தொடங்கியுள்ளது.

நடிகர் ஜீவா நடிப்பில் வரலாறு முக்கியம் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இது தொடர்ந்து எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இரண்டு திரைப்படங்களில் ஜீவா நடிக்கிறார். அதில் ஒரு படத்திற்கான படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. இந்த நிலையில் இரண்டாவது திரைப்படத்திற்கான படப்பிடிப்பை இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளனர்.  அந்த திரைப்படத்தை செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிகண்டன் என்பவர் இயக்குகிறார். அதேபோல் ஜீவாவிற்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.

ரம்மியமான பால்கனி.. கலர்ஃபுல் கிச்சன்.. நடிகை ரேஷ்மாவின் ஹோம் டூர்..!

பிரமாண்டமான பொருட்சளவில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. பிரபல தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு இந்த திரைப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனமாக தயாரிக்கிறார். இதற்கு இளம் இசையமைப்பாளரான நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தை அடுத்த ஆண்டு திரைக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

ஈரம் படத்தின் இயக்குனருடன் மீண்டும் இணையும் ஆதி

குறிப்பாக பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களைப் போல வித்தியாசமான கதையில் இந்த திரைப்படம் உருவாகவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். 

First published:

Tags: Actor Jeeva, Kollywood, Tamil Cinema