• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஜீவா, மிர்ச்சி சிவா ஜோடியாக நடிக்கும் பாயல் ராஜ்புத், தான்யா ஹோப்!

ஜீவா, மிர்ச்சி சிவா ஜோடியாக நடிக்கும் பாயல் ராஜ்புத், தான்யா ஹோப்!

பாயல் ராஜ்புத், தான்யா ஹோப்

பாயல் ராஜ்புத், தான்யா ஹோப்

பொன் குமரன் படத்தின் ஒப்பந்தமாகியிருக்கும் பாயல் அதியமானின் ஏஞ்சல் தவிர்த்து இரு தெலுங்குப் படங்களிலும், ஒரு கன்னடப் படத்திலும் நடித்து வருகிறார். 

  • News18
  • Last Updated :
  • Share this:
லிங்கா படத்தின் கதாசிரியரும், இயக்குனருமான பொன் குமரன் தனது அடுத்தப் படத்தை தமிழில் இயக்குகிறார். ஜீவா, மிர்ச்சி சிவா, பாயல் ராஜ்புத், தான்யா ஹோப் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். 

பொன் குமரன் அதிகமும் கன்னடப் படங்களே இயக்கியுள்ளார். தமிழில் ப்ரியாமணி நடிப்பில் வெளியான சாருலதாவை இயக்கியதும் இவரே. லிங்கா படத்தின் கதாசிரியர் என்றால் கூடுதலாக பலருக்கும் தெரியும்

இவர் அடுத்து தமிழில் இரண்டு ஹீரோ சப்ஜெக்டை இயக்குகிறார். றாவா, மிர்ச்சி சிவா நாயகர்களாக நடிக்க, அவர்கள் ஜோடியாக பாயல் ராஜ்புத், தான்யா ஹோப் நடிக்கின்றனர்

பாயல் ராஜ்புத் பஞ்சாபைச் சேர்ந்தவர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது நமது தமிழ் திரைப்படத்துறை. 2013 இல் வெளியான இருவர் உள்ளம் திரைப்படம்தான் பாயலின் முதல் சினிமா

பஞ்சாபி மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துவரும் இவரை கே.எஸ்.அதியமான் தனது ஏஞ்சல் படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார். உதயநிதி நடிக்கும் படம் இது

தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 வெங்கி மாமா, டிஸ்கோ ராஜா போன்ற முக்கியமான படங்களில் பாயல் நடித்துள்ளார்

Also read... தெலுங்குப் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு இத்தனை கோடிகளா?

பொன் குமரன் படத்தின் ஒப்பந்தமாகியிருக்கும் பாயல் அதியமானின் ஏஞ்சல் தவிர்த்து இரு தெலுங்குப் படங்களிலும், ஒரு கன்னடப் படத்திலும் நடித்து வருகிறார்

பொன் குமரன் படத்தின் இன்னொரு நாயகி தான்யா ஹோப். பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்டவர்தான்யா 2016 இல் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். நான்குப் படங்கள் முடித்த பின் 2019 இல் தடம் படத்தின் மூலம்  தமிழுக்கு வந்தார்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த தடத்தில் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் அருண் விஜய்யின் காதலியாக தான்யா நடித்திருந்தார்.

தொடர்ச்சியாக கன்னடப் படங்களில் நடித்தவர், விக்கி டோனர் இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கான தாராள பிரபுவில் நடித்தார்தமிழில் தற்போது குலசாமி மற்றும் சுந்தர் சி. நாயகனாக நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

பொன் குமரனின் புதிய படத்தில் இவர் மிர்ச்சி சிவாவின் ஜோடியாக வருகிறார்.  பொன் குமரனின் இந்தப் புதிய படத்தை ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் வினோத ஜெயின் தயாரிக்கிறார்.  படம் குறித்த மேலதிக தகவல்களை நாளை நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்க இருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: