முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜிகர்தண்டா 2 குறித்து முக்கிய அப்டேட்டை கூறிய கார்த்திக் சுப்புராஜ்

ஜிகர்தண்டா 2 குறித்து முக்கிய அப்டேட்டை கூறிய கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ்

சித்தார்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.  அத்துடன் வில்லனாக நடித்த பாபி சிம்ஹா தேசிய விருது வென்றார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். 

சித்தார்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.  அத்துடன் வில்லனாக நடித்த பாபி சிம்ஹா தேசிய விருது வென்றார்.

அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி தற்போது 8 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் புதிய வீடியோ ஒன்றே வெளியிட்டுள்ளார்.

Also read... சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து நடிகர் தனுஷிற்கு விலக்கு

அந்த வீடியோவில் ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை எழுதும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் ஜிகர்தண்டா 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லாரன்ஸ் நடிக்க பேச்சு வார்த்தைகள் நடைபெறுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Karthik subbaraj