முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் இணையும் சுந்தர் சி-யின் புதிய திரைப்படம்!

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் இணையும் சுந்தர் சி-யின் புதிய திரைப்படம்!

சுந்தர் சி புதிய படம்

சுந்தர் சி புதிய படம்

இதற்கு முன் ஜீவா, ஜெய் இருவரும் சுந்தர் சி-யின் கலகலப்பு 2 திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

  • Last Updated :

சுந்தர் சி தலைநகரம் 2 உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் ஒரு படத்தை இயக்கவும் செய்கிறார். மல்டி ஸ்டாரர் திரைப்படமாக இது உருவாகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோக்களை வைத்து படம் இயக்குவது சுந்தர் சி-க்கு புதிதல்ல. அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்த கலகலப்பு படத்தில் இரண்டு பேரும், கலகலப்பு 2 படத்தில் மூன்று பேரும் நாயகர்களாக நடித்து இருந்தனர். இப்போது மீண்டும் மூன்று பேரை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் இதில் நடிக்கின்றனர். நாயகிகளாக மாளவிகா சர்மா, அம்ரிதா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை சீரிசை தயாரித்த குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் இந்தத் திரைப்படத்தை தயாரிக்கிறது. சுந்தர் சி-யின் பிற படங்களைப் போல இதுவும் ரொமான்டிக் காமெடியாக தயாராகிறது. நகைச்சுவைக்கு முக்கியம் தந்து இந்தப் படத்தை அவர் இயக்க இருக்கிறார்.

பிக்பாஸ் அல்டிமேட்டில் ஓவியா கலந்து கொள்ளாததற்கு காரணம் இது தான்

ஜெய் நடிப்பில் எண்ணித்துணிக திரைப்படமும், ஸ்ரீகாந்த் நடிப்பில் தி பெட் என்ற திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. ஜீவா தனது தந்தை ஆர்பி சௌத்ரி தயாரிப்பில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்து வரும் வரலாறு முக்கியம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் ஜீவா, ஜெய் இருவரும் சுந்தர் சி-யின் கலகலப்பு 2 திரைப்படத்தில் நடித்திருந்தனர். ஸ்ரீகாந்த் சுந்தர் சி இயக்கத்தில் நடிப்பது இதுவே முதல் முறை.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Jeeva, Actor Srikanth, Sundar.C, Tamil Cinema