Home /News /entertainment /

இப்படியும் காப்பி அடிக்கலாம் - ஜீத்து ஜோசப்பின் மெமரிஸ்

இப்படியும் காப்பி அடிக்கலாம் - ஜீத்து ஜோசப்பின் மெமரிஸ்

ஜீத்து ஜோசப்பின் மெமரிஸ்

ஜீத்து ஜோசப்பின் மெமரிஸ்

ஒரு படத்தின் கதையை மொத்தமாக காப்பியடித்தால் எளிதாக மாட்டிக் கொள்வார்கள். இப்படி முக்கியமான காட்சிகளை மட்டும் வெவ்வேறு படங்களில் இருந்து எடுத்துக் கொண்டால் அத்தனை எளிதில் கண்டுபிடிக்க முடியாது, பெயரும் டேமேஜ் ஆகாது.

  • News18
  • Last Updated :


த்ரிஷ்யம் படத்துக்கு முன்பு ஜீத்து ஜோசப் இயக்கிய படம் மெமரிஸ். பிருத்விராஜ் நடித்த இந்தப் படம் 2013 இல் திரைக்கு வந்தது. ஜீத்து ஜோசப்புக்கு பிடித்தமான இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர். த்ரிஷ்யத்தைவிட மெமரிஸை விரும்புகிற ரசிகர்கள் ஏராளம் இருக்கிறார்கள்.

பிருத்விராஜ் இதில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அவரது மனைவியையும், மகளையும் ஒரு தீவிரவாதி படுகொலை செய்திருப்பான். இதனால் முழுநேர குடியில் காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கையில் கதை நிகழும். அந்த நகரத்தில் தொடர்ச்சியாக இளவயது ஆண்கள் ஒரேவிதமாக கொல்லப்படுவார்கள். மார்பில் கத்தியால் கீறப்பட்டு, ரத்த இழப்பு ஏற்பட்டு மரணங்கள்  நடந்திருக்கும். கொலையாளியை போலீசால் கண்டுபிடிக்க முடியாது. பிருத்விராஜ் இதுபோன்ற துப்பறியும் விஷயங்களில் கில்லாடி என்பதால் உயர் அதிகாரி பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பார். முதலில் மறுக்கும் பிருத்விராஜ் ஒருகட்டத்தில் ஒப்புக் கொள்வார். கொலையாளி யார், எதற்காக இந்த கொலைகள் என்பதை அவர் புலன்விசாரணை செய்து கண்டுபிடிக்கும்விதம் சுவாரஸியமானது.

இறுதிக்காட்சியில் குடோன் ஒன்றில்  கொலையாளியை சுற்றி வளைப்பார்கள். அவனோ சிலிண்டரை திறந்து விட்டிருப்பான். துப்பாக்கியால் சுட்டால், அதிலிருந்து கிளம்பும் தீப்பொறியில் மொத்த குடோனும் வெடித்துச் சிதறும். அவன் கடைசியாக கொலை செய்ய கடத்தி வந்திருக்கும் பிருத்விராஜின் தம்பி உள்பட அனைவரும் கொல்லப்படுவார்கள். இந்த இக்கட்டான நிலையில், பிருத்விராஜ் அருகில் இருக்கும் மீன் தொட்டிக்குள் துப்பாக்கியை நுழைத்து கொலையாளியை நோக்கி சுடுவார். துப்பாக்கி முனை தண்ணிக்குள் இருப்பதால் தீப்பொறி கிளம்பாது. கொலையாளி கொல்லப்பட மற்றவர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

மெமரிஸ் படத்தின் இந்த கிளைமாக்ஸ் பேசப்பட்டது. ஹீரோவின் சமயோஜித் புத்தியை (அதாவது அந்த சிச்சுவேஷனை எழுதிய ஜீத்து ஜோசப்பை) ரசிகர்கள் பாராட்டினர். ஆனால், அந்தக் காட்சி ஹாலிவுட்டில் படத்திலிருந்து அப்படியே காப்பி அடிக்கப்பட்டது.

1997 இல் மோர்கன் ப்ரீமேன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கிஸ் தி கேர்ள்ஸ். இதில் மோர்கன் ப்ரீமேன் போலீஸ் டிடெக்டிவ் மற்றும்  ஃபாரன்சிக் சைக்கலாஜிஸ்டாக இருப்பார். தொடர்ச்சியாக பெண்கள் கடத்தி கொலை செய்யப்படுவதை மோர்கன் துப்பு துலக்குவார். இறுதியில் கொலையாளி யார் என்பதையும் கண்டுபிடிப்பார். அவன் அவனது கடைசி விக்டிமின் வீட்டில் இருப்பான். அவளை கொலை செய்யப் போகும் தருணத்தில் மோர்கன் அங்கு செல்வார். அவன் சமையலுக்கு வரும் கியாஸ் பைப்பை திறந்து விட்டிருப்பான். சமையலறையில் இப்போது அவன், அந்தப் பெண், மோர்கன் மூவரும் இருப்பார்கள். மோர்கனால் அவனை துப்பாக்கியால் சுட முடியாது. நாம் ஏற்கனவே சொன்ன காரணம்தான். கொலையாளி சிகரெட் லைட்டரை எடுத்து பற்ற வைக்க முனைகையில் துப்பாக்கியை பால் கவரில் வைத்து மோர்கன் சுடுவார். 1997 இல் வந்த இந்தப் படத்தின் பால் கவரைதான் 2013 இல் மெமரிஸ் படத்தில் மீன் ஜாடியாக ஜீத்து ஜோசப் மாற்றியிருப்பார்.

Also read... பாலா, சூர்யா இணையும் படத்தின் நாயகி இவரா...?

ஒரு படத்தின் கதையை மொத்தமாக காப்பியடித்தால் எளிதாக மாட்டிக் கொள்வார்கள். இப்படி முக்கியமான காட்சிகளை மட்டும் வெவ்வேறு படங்களில் இருந்து எடுத்துக் கொண்டால் அத்தனை எளிதில் கண்டுபிடிக்க முடியாது, பெயரும் டேமேஜ் ஆகாது.

கொசுறு தகவல் - மெமரிஸ் படத்தைதான் அறிவழகன் ஆறாது சினம் என்ற பெயரில் அருள்நிதி நடிப்பில் தமிழில் ரீமேக் செய்தார்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி