சசிகுமாருக்கு வில்லனாகும் ஜே.டி.சக்ரவர்த்தி

ஜே.டி.சக்ரவர்த்தி

கிராமத்துப் பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க ஜே.டி.சக்ரவர்த்தியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 • Share this:
  சசிகுமாரின் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க ஜே.டி.சக்ரவர்த்தியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

  சசிகுமார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் குமாரின் இயக்கத்தில் நடிக்கிறார். இரு தினங்கள் முன்பு இதன் பூஜை நடந்தது. லக்ஷ்மண் குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா நாயகி.

  கிராமத்துப் பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க ஜே.டி.சக்ரவர்த்தியை ஒப்பந்தம் செய்துள்ளனர். ராம் கோபால் வர்மாவின் சிவா படத்தில் அறிமுகமான இவர், வர்மாவின் சத்யா படத்தின் மூலம் புகழ்பெற்றார். தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால், சமர், அரிமா நம்பி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், சத்யா போன்று ஒரு படம் தமிழில் அவருக்கு இன்னும் அமையவில்லை. இந்நிலையில் புதிய நம்பிக்கையாக சசிகுமாரின் படம் அவருக்கு கிடைத்திருக்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, ஷிவா நந்தீஸ்வரன் எடிட்டிங் செய்கிறார். டி.இமான் இசையில் இப்படம் தயாராகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: