நடிகை மற்றும் அரசியல்வாதி ஜெயசுதா பெரும்பாலும் தெலுங்கு படங்களில் பணியாற்றியவர். இந்தி திரையுலகில் அமிதாப் பச்சனின் சூரியவன்ஷம் படத்தில் நடித்து பிரபலமானார். இந்தப் படம் இந்தி சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்பாகிறது. சமீபத்தில், தென்னிந்திய நடிகர்களை மத்திய அரசு அங்கீகரிக்கத் தவறிவிட்டதாக தனது கருத்தை வெளிப்படுத்தினார் ஜெயசுதா. மேலும் அவர் தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரனாவத் மீதான தனது விமர்சனத்தையும் முன் வைத்தார்.
விஜய்யின் வாரிசு படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயசுதா, தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஐந்து நந்தி விருதுகள் மற்றும் ஐந்து தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார். மூத்த நடிகை ஜெயபிரதாவுடன் இணைந்து, தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரைப்பட துறையில் உள்ள பாகுபாடுகள் குறித்து சமீபத்தில் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
ஆஹா தளத்தில் ஒளிபரப்பாகும் ‘அன்ஸ்டாப்பபிள்’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய ஜெயசுதா, “கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ கிடைத்ததில் எனக்குப் பிரச்னையில்லை. அவர் ஒரு அற்புதமான நடிகை. இருப்பினும், அவர் 10 படங்களுக்குள் அந்த விருதைப் பெற்றார். இங்கே, நாங்கள் பல படங்களில் பணியாற்றிய நிலையில், மத்திய அரசின் அங்கீகாரம் இன்றி இருக்கிறோம். கின்னஸ் சாதனையில் இடம்பிடித்திருக்கும் பெண் இயக்குனர் விஜய நிர்மலா கூட அப்படி ஒரு பாராட்டைப் பெறவில்லை. அரசால் தென்னிந்திய திரையுலகம் பாராட்டப்படவில்லை என்று சில சமயங்களில் வருத்தமாக உணர்கிறேன்” என்றார். உலகிலேயே அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குநராக 2002-ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் விஜய நிர்மலா இடம் பிடித்தார்.
உலகளவில் 7000 கோடி வசூலை குவித்த அவதார்: தி வே ஆஃப் வாட்டர்!
பின்னர் பேசிய ஜெயபிரதா, "தானாக அது நமக்கு கிடைக்க வேண்டும், கேட்டு பெறக் கூடாது" என்றார். அதோடு தான் எம்.பி.யாக இருந்தபோது, என்.டி.ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரியதாகவும், அதை நிறைவேற்ற இன்றுவரை முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். 2013-ல் வெளியான ரஜ்ஜோ படத்தில் கங்கனா ரனாவத்துடன் இணைந்து ஜெயபிரதா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kangana Ranaut