ஷங்கர் படத்தில் பகத் பாசில், ஜெயராம்...?

ஜெயராம்

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் பகத் பாசில், அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது நடிகர் ஜெயராமையும் படத்தில் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஷங்கர் அடுத்த மாதம் தனது தெலுங்குப் படத்தை தொடங்குகிறார். ராம் சரண் நடிக்கும் இந்தப் படத்தில் பகத் பாசில், ஜெயராம் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியன் 2 தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்க தயாரானார் ஷங்கர். தில் ராஜு தயாரிப்பு. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பான் - இந்தியா திரைப்படமாக இது தயாராகிறது. கியாரா அத்வானி நாயகி, தமன் இசை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் பகத் பாசில், அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது நடிகர் ஜெயராமையும் படத்தில் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவொரு பொலிடிகல் ஆக்ஷன் படமாக தயாராகிறது, அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்

Also read... குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நடிகை பானுவின் மகள்...!

பகத் பாசில் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இது அவரது முதல் தெலுங்குப் படம். ஜெயராம் ஏற்கனவே பல தெலுங்குப் படங்களில் நடித்தவர். அல்லு அர்ஜுனின் கடைசிப் படம் ஆல வைகுந்தபுரமுலு படத்தில் அவரது தந்தையாக நடித்திருந்தார். விரைவில் வெளிவரவிருக்கும் பிரபாஸின் ராதே ஷ்யாம், மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா படங்களிலும் நடித்துள்ளார்மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான கதாபாத்திரத்திலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published: