Ponniyin Selvan: பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் வேடத்தில் ஜெயராம்...?

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளம்

மொட்டைத் தலையும் பின்பக்கம் குடுமியும் கொண்டது ஆழ்வார்க்கடியானின் தோற்றம்.

  • Share this:
    நேற்று மாலை பொன்னியின் செல்வன் டைட்டில் லுக் வெளியானது. The golden era comes to life என்ற வாசகத்துடன் லைகா இந்த டைட்டில் லுக்கை வெளியிட்டது. ரஹ்மான், பிரகாஷ்ராஜ், த்ரிஷா உள்ளிட்ட படத்தில் பணிபுரிகிறவர்கள் இதே வாசகத்துடன் பர்ஸ்ட் லுக்கை பகிர்ந்திருந்தனர்.

    எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்தப் படத்தை மணிரத்னம் இயக்குகிறார். படத்தின் திரைக்கதை, வசனத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் பங்களிப்பு செலுத்தியுள்ளார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு உள்பட ஏராளமானோர் நடிக்கின்றனர். இரு பாகங்களாக பொன்னியின் செல்வன் தயாராகிறது. முதல் பாகம் அடுத்த வருட கோடையில் வெளியாகும் என டைட்டில் லுக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

    பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன், குந்தவை பிராட்டியார், நந்தினி, பழுவேட்டரையர், அருள்மொழிவர்மன் என நிறைய முக்கியமான கதாபாத்திரங்கள் உள்ளன. அவர்களுக்கு இணையான கதாபாத்திரம், ஆழ்வார்க்கடியான் என்ற வைணவ சாமியாரின் கதாபாத்திரம். விஷ்ணு பக்தரான இவர் சோழர்களுக்காக உளவு பார்க்கிறவர். முக்கியமான அனைத்து நிகழ்வுகளிலும் தவிர்க்க முடியாமல் வருகிறவர். சிவ பக்தர்களை தண்டம் கொண்டு அடிக்கும் அளவுக்கு தீவிர வைணவ பக்தர். அன்றைக்கு முஸ்லீம்களோ, கிறிஸ்தவர்களோ இல்லை. மதச்சண்டைகள் வைணவத்துக்கும், சைவத்துக்குமிடையில்தான் நடந்தன. அதனை கல்கி ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தின் மூலம் சொல்லியிருப்பார். அடிப்படையில் நகைச்சுவை மிளிரும் கதாபாத்திரம் இது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த வேடத்தில் ஜெயராம் நடிப்பதாக தகவல். மொட்டைத் தலையும் பின்பக்கம் குடுமியும் கொண்டது ஆழ்வார்க்கடியானின் தோற்றம். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் ஜெயம் ரவி, கார்த்தியுடன் இருக்கும் ஜெயராம் மொட்டைத் தலையுடன் காட்சியளிக்கிறார். அதனை வைத்து அவர்தான் ஆழ்வார்க்கடியான வேடத்தை செய்வதாக கூறுகிறார்கள்.

    இதற்குமுன் பஞ்சவர்ண தத்தா (பஞ்சவர்ண கிளி) மலையாளப் படத்தில் மொட்டைத் தலையுடன் ஒரு காமெடி கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்திருப்பார். ஆழ்வார்க்கடியான் வைணவ பாடல்களை செந்தமிழில் பாடக்கூடியவர். அந்த வேடத்துக்கு ஜெயராமின் மலையாளம் கலந்த தமிழ் நியாயம் செய்யுமா?



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: