ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

எழுத்தாளர் ஜெயமோகனின் கதை தழுவி உருவான 'ரத்த சாட்சி' திரைப்படம் : ஓடிடியில் வெளியானது!

எழுத்தாளர் ஜெயமோகனின் கதை தழுவி உருவான 'ரத்த சாட்சி' திரைப்படம் : ஓடிடியில் வெளியானது!

ரத்த சாட்சி

ரத்த சாட்சி

ரத்த சாட்சி படக்குழுவினருக்கு நடிகர் கமல்ஹாசன். வாழ்த்து சிறுகதையை மையமாக வைத்து ரத்த சாட்சி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஜெயமோகனின் கைதிகள் என்ற சிறுகதை ரத்த சாட்சி என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது.

தமிழின் முன்னணி எழுத்தாளரான ஜெயமோகன், கைதிகள் என்ற சிறுகதை எழுதியிருந்தார். அது வாசகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்து இருந்தது. இந்த நிலையில் கைதிகள் சிறுகதையை ரத்த சாட்சி என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாக்கியுள்ளனர்.  அந்த படத்தை ரஃபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார்.

ஆயுதப்படைகளுக்குள் மனித விமானம் இருக்கிறதா என்பதை அடிப்படையாக வைத்து அந்த சிறுகதை எழுதப்பட்டிருந்தது. இந்த சிறுகதையை பிரபல இயக்குனர்களான மணிரத்னம் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் திரைப்படமாக முயற்சித்தனர். ஆனால் அவர்களுக்கு முன் அறிமுக இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் உரிமை பெற்று திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.

இது ஆஹா ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.  இந்த திரைப்படக் குழுவினருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரத்த சாட்சி படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.  மேலும் கமல்ஹாசனிடம் இணை தயாரிப்பாளராக உள்ள மகேந்திரனின் மனைவி அனிதா மகேந்திரன் ரத்த சாட்சியை தயாரித்திருக்கிறார்.

Read More: வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற பிரபல நடிகை! திரைத்துறையினர் வாழ்த்து.!

சிறந்த இலக்கிய படைப்புகள் வெற்றிகரமான திரைப்படங்களாகவும் ரசனைக்கு ஏற்றவாறு அமைய வேண்டும் என்பதற்காக ஜெயமோகன் எழுதிய மூலக்கதைக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் திரைக்கதை அமைக்க மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்திருக்கின்றனர்.

Published by:Srilekha A
First published:

Tags: Tamil Cinema, Writer Jayamohan