ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்து மாஸ் அப்டேட்!

ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்து மாஸ் அப்டேட்!
  • News18
  • Last Updated: October 15, 2019, 11:55 AM IST
  • Share this:
ஜெயம் ரவி நடிக்கும் பூமி படத்தில் பாப் பாடகர் யோகி பி ஒரு பாடலை பாடி உள்ளதாக டி இமான் அறிவித்துள்ளார்.

கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி தற்போது லக்‌ஷ்மண் இயக்கத்தில் ‘பூமி’, அஹ்மத் இயக்கத்தில் ’ஜனகனமன’ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பூமி படம் ஜெயம் ரவியின் 25-வது படம். இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் பூமி படத்தில் பாப் பாடகர் யோகி பி ஒரு பாடலை பாடி உள்ளதாக டி இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
இந்நிலையில் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியானது.பூமி மற்றும் ஜனகனமன ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
First published: October 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்