முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜெயம் ரவி நடித்த ’அகிலன்’ ரிலீஸ்.. எப்படி இருக்கு படம் ? இதோ ட்விட்டர் விமர்சனம்!

ஜெயம் ரவி நடித்த ’அகிலன்’ ரிலீஸ்.. எப்படி இருக்கு படம் ? இதோ ட்விட்டர் விமர்சனம்!

அகிலன் படம்

அகிலன் படம்

Agilan Movie Twitter Review: நடிகர் ஜெயம் ரவி, பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் அகிலன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘பூலோகம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் என்.கல்யாண கிருஷ்ணன். அவர் மீண்டும் ஜெயம் ரவியுடன் கைகோத்திருக்கும் படம் ‘அகிலன்’. சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தில் ப்ரியாபவானிசங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில், 'அகிலன்' திரைப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது. அழுத்தமான வசனங்களுடன் வெளியான அந்த டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இயக்குநரின் முந்தைய படம் பூலோகம் போலவே இந்த படத்திலும் பல கருத்துகள் இடம்பெற்றுள்ளது. ட்ரெய்லரை ஒட்டுமொத்தமாக பார்த்ததில் உணவு அரசியலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

“குற்றஉணர்ச்சி, நன்றி. விஸ்வாசம், ஒழுக்கம் இதெல்லாம் சமூகம் அடிமையாக்க உருவாக்கியிருக்கிறது”, “பங்குசந்தையில இருந்து சராசரி மனுசன் வாங்குற வெங்காயம் வரைக்கும் பொருளோட விலைய தீர்மானிக்கிறது சீ ட்ராஃபிக் தான்” போன்ற வசனங்கள் ட்ரெய்லரின் கவனம் ஈர்த்தன.

இந்நிலையில் இன்று திரையரங்குகளில் வெளியான அகிலன் படம் குறித்து ட்விட்டரில் பலர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Jayam Ravi, Priya Bhavani Shankar