Home /News /entertainment /

ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் படத்தின் ஷூட்டிங் நிறைவு… ஆக்சன் நிறைந்த க்ளிம்ஸ் வெளியீடு

ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் படத்தின் ஷூட்டிங் நிறைவு… ஆக்சன் நிறைந்த க்ளிம்ஸ் வெளியீடு

அகிலன் படத்தில் ஜெயம் ரவி

அகிலன் படத்தில் ஜெயம் ரவி

அகிலன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி, தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர்.

ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள க்ளிம்ஸ் வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த பூமி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 2019 ல் வெளியான கோமாளி படத்திற்கு பின்னர் ரவிக்கு சொல்லிக் கொள்ளும்படியாக படங்கள் அமையவில்லை.

இந்நிலையில் அகிலன் என்ற முழு நீள ஆக்சன் படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜெயம் ரவியின் பூலோகம் படத்தை இயக்கிய என். கல்யாண் கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

இதையும் படிங்க - Pooja Hegde: பீஸ்ட் பூஜா ஹெக்டேவா இது? நடிக்க வர்றதுக்கு முன்னாடி இருந்த லுக்!

இதனை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது. அகிலன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி, தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர். கைதி படத்தில் இசையால் கவனம் ஈர்த்த சாம் சி.எஸ். அகிலன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க - இமானின் முன்னாள் மனைவி அந்த சர்ச்சை நிகழ்ச்சிக்கு செல்கிறாரா?

அகிலன் படத்தில் கப்பலில் பணிபுரியும் நபராக ஜெயம் ரவி நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்ற நிலையில அது தொடர்பான கிளிம்ஸ் காட்சிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.



அகிலன் படத்தின் டீசர் அடுத்த மாதம் வெளியாகிறது. அடுத்தாக ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம்தேதி வெளியாகவுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Actor Jayam Ravi

அடுத்த செய்தி