ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் திரைப்படம் செப்டம்பரில் வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன.
ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த பூமி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 2019 ல் வெளியான கோமாளி படத்திற்கு பின்னர் ரவிக்கு சொல்லிக் கொள்ளும்படியாக படங்கள் அமையவில்லை.
இந்நிலையில் அகிலன் என்ற முழு நீள ஆக்சன் படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜெயம் ரவியின் பூலோகம் படத்தை இயக்கிய என். கல்யாண் கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க - இயக்குநர் பாலாவுடன் சண்டையா? முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!
இதனை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது. அகிலன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி, தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர். கைதி படத்தில் இசையால் கவனம் ஈர்த்த சாம் சி.எஸ். அகிலன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அகிலன் படத்தில் கப்பலில் பணிபுரியும் நபராக ஜெயம் ரவி நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்ற நிலையில அது தொடர்பான கிளிம்ஸ் காட்சிகள் கடந்த வாரம் வெளியாகின.
இந்நிலையில் செப்டம்பர் 16ம்தேதி அகிலன் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க - விக்ரம் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை… சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
செப்டம்பர் 30ம் தேதி ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மணி ரத்னமின் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
அடுத்ததாக ஹரியின் இயக்கத்தில் ஜெயம் ரவி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.