ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சுந்தர சோழன் - அருள்மொழி வர்மனின் கடந்த கால அப்பா-மகன் உறவு - ரியாக்ட் செய்த ஜெயம்ரவி!

சுந்தர சோழன் - அருள்மொழி வர்மனின் கடந்த கால அப்பா-மகன் உறவு - ரியாக்ட் செய்த ஜெயம்ரவி!

ஜெயம் ரவி - பிரகாஷ் ராஜ்

ஜெயம் ரவி - பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ் - ஜெயம் ரவி இருவரையும் வைத்து அப்பா - மகன் மீம்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயம் ரவி இருவர் குறித்த தந்தை - மகன் மீம்ஸுக்கு ரியாக்ட் செய்துள்ளார் ரவி.

  இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது. இதில் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

  குறிப்பாக இதில் சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜும், அவரது மகன்கள் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அருள்மொழியாக ஜெயம்ரவியும், மகள் குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். இதற்கிடையே பிரகாஷ் ராஜ் - த்ரிஷா இருவரையும் வைத்து சில நாட்களுக்கு முன்பு மீம் வெளியிட்டனர் ரசிகர்கள். அதனை பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

  மணிரத்னம் இடதுசாரி குணம் கொண்டவர் என்பதற்காக பொன்னியின் செல்வன் படத்தை விமர்சிப்பதா? திமுக எம்.பி திருச்சி சிவா அறிக்கை

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் தற்போது பிரகாஷ் ராஜ் - ஜெயம் ரவி இருவரையும் வைத்து அப்பா - மகன் மீம்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைப் பார்த்து சிரித்த ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜிற்கு அந்த மீமை டேக் செய்துள்ளார். எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம் ஆகியப் படங்களில் ஏற்கனவே அவர்கள் அப்பா - மகன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் இவர்கள் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Jayam Ravi, Actor Prakashraj