ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கிறிஸ்துமஸ் வெளியீட்டை தவிர்த்தது ஜெயம் ரவியின் அகிலன்… புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிப்பு

கிறிஸ்துமஸ் வெளியீட்டை தவிர்த்தது ஜெயம் ரவியின் அகிலன்… புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிப்பு

அகிலன் படத்தின் ஜெயம் ரவி - ப்ரியா பவானி சங்கர்

அகிலன் படத்தின் ஜெயம் ரவி - ப்ரியா பவானி சங்கர்

ஜெயம் ரவி ராஜேஷ் இயக்கும் சைரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஐ. அகமது இயக்கத்தில் நயன்தாராவுடன் இறைவன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீட்டை தவிர்த்துள்ளது. இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் கதையின் நாயகனாக சிறப்பான நடிப்பை ஜெயம் ரவி வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படம் உலகளவில் ரூ. 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கிறது.

தனக்கு ஏற்ற ஸ்க்ரிப்டுகளை தேர்வு செய்து ஜெயம் ரவி நடித்து நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் கல்யான் கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஆகஸ்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் ரிலீஸ் காரணமாக வெளியீடு கிறிஸ்துமஸ் விடுமுறைகளுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

WATCH – விஜய் சேதுபதி நடித்துள்ள ‘DSP’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி…

இந்நிலையில் மீண்டும் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. போஸ்ட் புரொடக்சன் மற்றும் புரொமோஷன் பணிகள் காரணமாக வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படம் மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் அகிலன் படத்துடைய டிஜிட்டல் வெளியீட்டு உரிமம் மிகப்பெரும் தொகைக்கு பிஸ்னஸ் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

மெஹந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கிய ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம்..! கலர்புல் போட்டோஸ்.!

இந்த படத்தை வரும் பிப்ரவரி மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், ரசித் ஜாடன் உள்ளிட்டோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஜெயம் ரவி தற்போது ராஜேஷ் இயக்கும் சைரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஐ. அகமது இயக்கத்தில் நயன்தாராவுடன் இறைவன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

First published:

Tags: Actor Jayam Ravi