Home /News /entertainment /

முதல்முறையாக காமெடிப்பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி

முதல்முறையாக காமெடிப்பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

ஒரு வெற்றி நிச்சயம் தேவை என்ற நிலையில் ஜெயம் ரவியிடம் கால்ஷீட் பெற்றிருக்கிறார் ராஜேஷ். இது ஜெயம் ரவியின் 30 வது படம் பேமிலி என்டர்டெயினராக இந்தப் படத்தை எடுக்க ராஜேஷ் திட்டமிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
ஜெயம் ரவி மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் டைட்டில் ரோலில் நடித்துள்ளார். அடுத்து அவர் நடிக்கப் போகும் படம் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது.

ஜெயம் ரவி பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. ஜெயம் ரவியை வைத்து மிருதன், டிக் டிக் டிக் படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் அவரை இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால், அவரோ, ஆர்யாவை வைத்து கேப்டன் படத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கயிருப்பது உறுதியாகியுள்ளது.

சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த ராஜேஷ் பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைத் தந்து கவனிக்க வைத்தார். ஆனால், முதல் ஹாட்ரிக்கோடு வெற்றி அவரிடமிருந்து விடைபெற்றது. அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு, மிஸ்டர் லோக்கல் என அவர் இயக்கிய எந்தப் படமும் ஓடவில்லை. கடைசியாக ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் வணக்கம்டா மாப்பிள்ளை படத்தை எடுத்தார். அது சன் நெக்ஸ்டில் வெளியானது. பலருக்கும் அப்படியொரு படம் வந்ததே தெரியாது.

Also read... மரைக்கார் படத்துக்கு போட்டியாக துல்கர் சல்மான் படத்தை களமிறகும் நெட்பிளிக்ஸ்

ஒரு வெற்றி நிச்சயம் தேவை என்ற நிலையில் ஜெயம் ரவியிடம் கால்ஷீட் பெற்றிருக்கிறார் ராஜேஷ். இது ஜெயம் ரவியின் 30 வது படம் பேமிலி என்டர்டெயினராக இந்தப் படத்தை எடுக்க ராஜேஷ் திட்டமிட்டுள்ளார். அடுத்த வருடம் மார்ச்சுக்கு மேல் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Jayam Ravi

அடுத்த செய்தி