’பூலோகம்’ இயக்குநருடன் மீண்டும் இணையும் ஜெயம் ரவி!

ஜெயம் ரவி

பாக்ஸிங் பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார்.

 • Share this:
  ஜெயம் ரவியை வைத்து பாக்ஸிங் பின்னணியில் பூலோகம் படத்தை இயக்கியவர் கல்யாண கிருஷ்ணன். இவரது இயக்கத்தில் புதுப்படம் ஒன்றில் ஜெயம் ரவி நடிக்கிறார்.

  பொன்னியின் செல்வன், ஜன கன மன படங்களில் நடித்துவரும் ஜெயம் ரவி, அடுத்து கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இவர், ஜெயம் ரவி நடிப்பில் 2015 வெளியான பூலோகம் படத்தை இயக்கியவர். பாக்ஸிங் பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். 2011 இல் தொடங்கப்பட்ட படம் சில பிரச்சனைகளால் 2015 ஆம் ஆண்டே வெளியானது. எனினும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. WWF சாம்பியன் நாதன் ஜோன்ஸும் இதில் நடித்திருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கல்யாண கிருஷ்ணன் அடுத்து ஜெயம் ரவியை வைத்து புதுப்படம் இயக்குகிறார். பூலோகம் போன்று இதுவும் ஆக்ஷன் படமாக தயாராகிறது. இதில் அனேகமாக நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கக்கூடும். இன்றைய தேதியில் அதிகப் படங்களில் நடிக்கும் நடிகை ப்ரியா பவானி சங்கர். அவரது நடிப்பில் கசடதபற, குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, பொம்மி, ஹாஸ்டல், ருத்ரன், இந்தியன் 2, பத்து தல ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. ஹரி, சர்ஜுன் இயக்கும் படங்களிலும் இவர் நாயகியாக நடிக்கிறார். ஜெயம் ரவி படமும் கூடுதலாக ப்ரியா பவானி சங்கரின் பட்டியலில் சேர்ந்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: