திரையரங்குகள் திறப்பு... தலைவி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுவினர்!

தலைவி ரிலீஸ்

இந்தப் படத்தில் கங்கணா ரணாவத், ஜெயலலிதா கேரக்டரிலும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

 • Share this:
  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’தலைவி’ செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகியுள்ள, இத்திரைப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இயக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கங்கணா ரணாவத், ஜெயலலிதா கேரக்டரிலும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதோடு இந்தப் படத்தில் கருணாநிதி கேரக்டரில் பிரகாஷ்ராஜ், சோபன்பாபு கேரக்டரில் ஜிஷ்ஷூ செங்குப்தா, சசிகலா கேரக்டரில் பூர்ணா, ஜானகி ராமச்சந்திரன் கேரக்டரில் மது, ஜெயலலிதாவின் தாயார் சந்தியா கேரக்டரில் பாக்யஸ்ரீ, ஆர்.எம்.வீரப்பன் கேரக்டரில் சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.  இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த காரணத்தால், ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில், தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதால், திரையரங்குகளை 50% பார்வையாளர்களுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது.

  இதையடுத்து முடங்கிக் கிடக்கும் படங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் எனத் தெரிகிறது. அந்த வகையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகியுள்ள ‘தலைவி’ வரும் செப்டம்பர் 10-ம் தேதி திரைக்கு வருமென படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: