திங்கட்கிழமை வசூலில் பின் தங்கிய தலைவி

தலைவி - கங்கனா ரனவத்

தலைவியின் ஒட்டு மொத்த இந்திய வசூல் பத்து கோடியைக்கூட தொடாது என்பதே நிலைமை.

 • Share this:
  தலைவி படம் அனைத்து மொழிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் சில சம்பவங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக தூவி எடுக்கப்பட்ட படம்தான் தலைவி. ஆங்கில, இந்தி ஊடகங்கள் படத்தை பாராட்டினாலும், படத்தில் வைக்கப்பட்டிருக்கும் சம்பவங்களில் உண்மைத்தன்மை இல்லாததால் தமிழகத்தில் படத்தை யாரும் சீண்டவில்லை.

  செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்திக்கு படம் வெளியாகியும் இந்தி, தெலுங்கு, தமிழ் மூன்று மொழிகளும் சேர்த்து இரண்டு கோடிகூட படம் வசூலிக்கவில்லை. அதேநிலைதான் சனிக்கிழமையும். ஞாயிறு சில லட்சங்கள் அதிகமாக படம் வசூலித்தது.

  வாரநாளான திங்கள்கிழமை தலைவி மூன்று மொழிகளிலும் சேர்த்து, வெறும் 60 லட்சங்களை மட்டும் வசூலித்து வாஷ் அவுட்டாகியுள்ளது. படத்தின் திரையரங்கு வசூல் ஒரு பொருட்டல்ல, மற்ற வியாபாரங்கள் மூலமே போட்ட பணத்தை எடுத்துவிட்டேன் என்று கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தலைவியின் ஒட்டு மொத்த இந்திய வசூல் பத்து கோடியைக்கூட தொடாது என்பதே நிலைமை. 100 கோடியில் பிரமாண்டமாக  எடுக்கப்பட்ட படம் இப்படியொரு மோசமான தோல்வியை திரையரங்கில் பெற்றிருப்பது இதுவே முதல்முறை.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: