ஜெ. வாழ்க்கை வரலாறு கதையில் கஜோல், அமலாபால்?

news18
Updated: April 15, 2019, 8:07 PM IST
ஜெ. வாழ்க்கை வரலாறு கதையில் கஜோல், அமலாபால்?
கஜோல் மற்றும் அமலாபால்
news18
Updated: April 15, 2019, 8:07 PM IST
‘சசிலலிதா’ படத்தில் நடிக்க கஜோல் மற்றும் காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு பலரும் அவரது வாழ்க்கை வரலாறை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.இயக்குநர் ஏ.எல்.விஜய் தலைவி என்ற டைட்டிலுடன் இந்தப் படத்தை தமிழில் இயக்குகிறார். இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று வெளியானது. தலைவி என்ற பெயரில் தமிழில் உருவாகும் இந்தப் படம் இந்தியில் ‘ஜெயா’ என்ற டைட்டிலுடன் உருவாகிறது. இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் நடிக்கிறார்.இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் பிரியதர்ஷினி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தி அயர்ன் லேடி என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நித்யாமேனன் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் சசிகலாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Nithya menon, நித்யா மேனன்
Loading...
இந்நிலையில் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அவரே தயாரித்து இயக்கப் போகும் இந்தப் படத்துக்கு ‘சசிலலிதா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்தப் படம் சசிகலாவின் பார்வையில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றைப் பேசும் படமாக இருக்கும் என்றும் ஜெகதீஸ்வர ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க கஜோலிடமும், சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த 3 படங்கள் தவிர கவுதம் வாசுதேவன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று கதையை வெப் சீரிஸாக இயக்குகிறார். இயக்குநர் பாரதிராஜாவும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் உள்ளார்.

வீடியோ: விஜயகாந்த் இன்று சென்னையில் பரப்புரை!விஜய் தயாரிக்கும் முதல் படம்... ஹீரோயினாகும் வாணி போஜன்...!


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...