ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று இல்லை..

அமிதாப் பக்சன், அபிஷேக் பக்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஜெயா பக்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா பாதிப்பு இல்லை.

ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று இல்லை..
அமிதாப் பக்சன் குடும்பத்தினர்
  • Share this:
பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சனுக்கும், அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

77 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதுடன், “எனது குடும்பத்தார் மற்றும் எனது பணியாளர்களுக்கு கொரோனா தொற்றுக்கான சோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள். கடந்த 10 நாட்களுக்குள் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் சோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். சிறிது நேரத்தில் அவருடைய மகனும், பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அமிதாப் பக்சன் மனைவி ஜெயா பக்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா பக்சன் இவர்களது பரிசோதனை முடிவும் தற்போதும் வெளியாகி உள்ளது. அதில் மூவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று உறுதியாகி உள்ளது. மேலும் அவர்கள் பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading