Home /News /entertainment /

‘மாஸ் கமர்ஷியல் இயக்குனர்’ – அட்லியை பாராட்டிய ஷாரூக்கான்

‘மாஸ் கமர்ஷியல் இயக்குனர்’ – அட்லியை பாராட்டிய ஷாரூக்கான்

நயன்தாரா திருமணத்தின்போது அட்லியுடன் ஷாரூக்கான்

நயன்தாரா திருமணத்தின்போது அட்லியுடன் ஷாரூக்கான்

Shahrukh Khan on Atlee : ஷாரூக்கானுக்கு அடுத்த ஆண்டு 3 சூப்பர் படங்கள் ரிலீஸாக உள்ளன. ஜனவரி மாதம் பதான் படமும், ஜூனில் ஜவானும், டிசம்பரில் டுங்கி படமும் ரிலீஸாக திட்டமிடப்பட்டுள்ளது.

    மாஸ் கமர்ஷியல் இயக்குனர் என்று அட்லியை இந்தி சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் பாராட்டியுள்ளார்.

    ராஜா ராணி படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து மெர்சல், தெறி, பிகில் என வெற்றிப் படங்களை இயக்குனர் அட்லி கொடுத்து வருகிறார். அட்லி எடுக்கும் படங்கள் மினிமம் கியாரண்டி தருவதால், அவரை புக் செய்வதற்கு தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தற்போது இந்தி சினிமாவுக்குள் நுழைந்துள்ள அட்லி, அங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாரூக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க - ‘இந்தி பட இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்’ – அருண் விஜய் பேட்டி 

    ஜவான் படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த நயன்தாராவின் திருமணத்தில் ஷாரூக்கான் அட்லியுடன் பங்கேற்றார்.

    தற்போது ஷாரூக்கான் சினிமாத் துறைக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதையொட்டி ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஷாரூக்கான் பதில் அளித்துள்ளார்.

    அட்லீ தொடர்பான கேள்வி ஒன்றுக்கு ஷாரூக்கான் அளித்த பதிலில் கூறியதாவது-

    ஜவான் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் கதை குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. நான் அட்லியின் அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். அவரது படங்கள் மாஸ் கமர்ஷியல் என்டர்டெய்ன்மென்ட்டாக இருக்கும். நான் இதுவரை அதுபோன்ற படங்களில் நடித்ததில்லை.

    இதையும் படிங்க - ரூ. 5 கோடி காருடன் அஜித்… வைரலாகும் லண்டன் புகைப்படங்கள் 

    இருவரும் இணைந்து ஜவான் படத்தை அளிக்கவிருக்கிறோம். இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என நம்புகிறேன்.

    இவ்வாறு  அவர் கூறியுள்ளார். ஷாரூக்கானுக்கு அடுத்த ஆண்டு 3 சூப்பர் படங்கள் ரிலீஸாக உள்ளன. ஜனவரி மாதம் பதான் படமும், ஜூனில்  ஜவானும், டிசம்பரில் டுங்கி படமும் ரிலீஸாக திட்டமிடப்பட்டுள்ளது.

    இதில் டுங்கி படத்தை இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராஜ் குமார் ஹிரானி இயக்கி வருகிறார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Atlee, Shah rukh khan

    அடுத்த செய்தி