அனுபமாவை ட்விட்டரில் அன்ஃபாலோ செய்த பும்ரா!

ட்விட்டரில் இருவரும் ஒருவரையொருவர் பின் தொடர்ந்து வருவதால் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வெளிவந்தன.

news18
Updated: July 10, 2019, 6:04 PM IST
அனுபமாவை ட்விட்டரில் அன்ஃபாலோ செய்த பும்ரா!
அனுபமா | பும்ரா
news18
Updated: July 10, 2019, 6:04 PM IST
வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நடிகை அனுபமா பரமேஸ்வரனை ட்விட்டரில் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார்.

யாக்கர் மன்னன் என்றழைக்கப்படும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இந்திய அணிக்கு தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் இருந்த குறையை பும்ரா போக்கியுள்ளார் என்றே சொல்லாம். ஐ.சி.சி பவுலர்கள் தரவரிசைப் பட்டியலில் பும்ரா தான் முதலிடத்தில் இருக்கிறார்.

இவருக்கும் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அனுபாமாவிற்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுப்பட்டது. இதற்கு காரணம் ட்விட்டரில் பும்ரா ஃபாலோ செய்யும் 25 பேர்களில் பெரும்பாலானோர்  கிரிக்கெட் வீரர்கள். மற்றவை கிரிக்கெட் தொடர்புடைய பக்கம். அவர் ஃபாலோ செய்யும் ஒரே நடிகை அனுபாமா தான். அனுபாமாவும் தனது ட்விட்டரில் பும்ராவை ஃபாலோ செய்து வந்தார்.

ட்விட்டரில் இருவரும் ஒருவரையொருவர் பின் தொடர்ந்து வருவதால் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வெளிவந்தன. இதனால் தற்போது ட்விட்டரில் தான் பின் தொடர்ந்த 25 பேரில் அனுபமாவை அன்ஃபாலோ செய்துள்ளார் பும்ரா.தற்போது பும்ரா 24 பேரை மட்டுமே ட்விட்டரில் பின் தொடர்கிறார். ஆனால் அனுபமா தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து பும்ராவை நீக்கவில்லை.முன்னதாக இருவரும் காதலித்து வருவதாக வெளியான தகவல் குறித்து பதிலளித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், பும்ரா தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும் அதற்கு மேல் இதுகுறித்து சொல்ல எதுவுமில்லை என்றும் கூறியிருந்தார்.

வீடியோ பார்க்க: இயக்குநர் சங்கத்திற்குள் மதுபாட்டில்கள் வந்தது எப்படி? கரு.பழனியப்பன் கேள்வி

First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...