• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அக்வாமேனின் புதிய உடை, தோற்றத்தை வெளியிட்ட ஜேம்ஸ் வான்!

அக்வாமேனின் புதிய உடை, தோற்றத்தை வெளியிட்ட ஜேம்ஸ் வான்!

அக்வாமேன்

அக்வாமேன்

ஜேம்ஸ் வானின் அக்வாமேன் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது பாகத்தை எடுத்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
டிசி காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்களில் ஒருவர் அக்வாமேன். இந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து, 2018 இல் அக்வாமேன் திரைப்படம் வெளியானது. அக்வாமேனாக ஜேஸன் மொமோ நடித்திருந்தார். ஜேம்ஸ் வான் இயக்கம்.

அக்வாமேன் எதிர்பார்த்ததைவிட பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குனர் ஜேம்ஸ் வான். இவர் ஆஸ்ட்ரேலியன் இயக்குனர். மலேசியா - சைனா பின்னணியிலிருந்து வந்தவர். ஹாரர் த்ரில்லர் படங்களின் எவர்கிரீன் அடையாளமாக இருக்கும் ஸா (Saw) படத்தை உருவாக்கியவர். தி கான்சூரிங், இன்சிடியஸ் என்று ஹாரர் படங்களின் மாஸ்டர் பீஸ்கள் இவர் இயக்கியவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹாரர் ஏரியாவில் புழங்கிக் கொண்டிருந்தவரை பாஸ்ட் அண்ட் பியூரியஸ் ஆக்ஷன் சீரிஸின் 7 வது பாகத்தை இயக்க வைத்தனர். அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் நடிகர் பால் வால்கர் விபத்தில் மரணமடைந்தார். ஹாரர் படம் எடுத்தவர் ஆக்ஷன் படத்தை உருப்படியாக எடுப்பாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. உலகம் முழுவதும் உள்ள ஆக்ஷன்பட ரசிகர்களின் அட்ரினலை அந்த டீஸர் எகிற வைத்தது. விளைவு யாரும் எதிர்பார்க்காதது.

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் சீரிஸில் இன்றுவரை அதிகம் வசூலித்த படமாக ஏழாவது பாகம் உள்ளது. உலக அளவில் அதிகம் வசூலித்த படங்களில் முதல் பத்து இடத்துக்குள் இந்தப் படம் இன்றும் இடம்பெற்றுள்ளது.

Also read... ஆக்ராவில் சிவகார்த்திகேயனின் டான் படப்பிடிப்பு - புகைப்படங்கள்!

ஜேம்ஸ் வானின் அக்வாமேன் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது பாகத்தை எடுத்து வருகின்றனர். இரண்டாவது பாகத்தில் அக்வாமேனின் புதிய உடை மற்றும் தோற்றத்தை ஜேம்ஸ்வான் வெளியிட்டுள்ளார். சட்டையின்றி இருக்கும் அக்வாமேனாக நடிக்கும் ஜேஸன் மொமோவுடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்



அக்வாமேன் 2 படத்துக்கு, அக்வாமேன் தி லாஸ்ட் கிங்டம் என பெயர் வைத்துள்ளனர். அடுத்த வருடம் படம் திரைக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: