ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஞ்சிதமே பாடல் : ஒரே ஷாட்டில் தொடர்ந்து 1.20 நிமிடம் நடனமாடிய விஜய்..! - ஜானி சொன்ன செம அப்டேட்

ரஞ்சிதமே பாடல் : ஒரே ஷாட்டில் தொடர்ந்து 1.20 நிமிடம் நடனமாடிய விஜய்..! - ஜானி சொன்ன செம அப்டேட்

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல்

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல்

Varisu Vijay விஜய்யை நடனமாட ஜானி அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார். பின்னர் ராஷ்மிகாவை அழைக்க அவர் ஜானியுடன் நடனமாடினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. தமிழில் வாரிசுடன் நடிகர் அஜித்தின் துணிவும் தெலுங்கில் சிரஞ்சீவியின் 'வால்டர் வீரய்யா' மற்றும் பாலகிருஷ்ணாவின் 'விர சிம்ஹா ரெட்டி' படமும் வெளியாவதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் 'தோழா' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் வம்சி மீண்டும் தனது மேஜிக்கை நிகழ்த்துவார் என விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். வாரிசு படத்துக்கு முதன்முறையாக தமன் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே 3 பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில் இசை வெளியீட்டு விழாவில் மேலும் 3 பாடல்கள் வெளியாகின்றன.

வாரிசு இசை வெளியீட்டு விழா: அப்பா - அம்மாவை கைகொடுத்து வரவேற்ற விஜய் - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி?

வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, குஷ்பு, சரத்குமார், பிரபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடன இயக்குநர் ஜானி பேசியதாவது, நடிகர் விஜய் ரஞ்சிதமே பாடல் நடனம் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும், ரசிகர்களும் நடனமாட வேண்டும் என்று கூறினார்.

அந்தப் பாடலில் விஜய் 1 நிமிடம் 20 நொடி ஒரே ஷாட்டில் விஜய் நடனமாடினார் என்று குறிப்பிட்டார். பின்னர் விஜய்யை நடனமாட ஜானி அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார். பின்னர் ராஷ்மிகாவை அழைக்க அவர் ஜானியுடன் நடனமாடினார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Varisu