இரண்டு பாலிவுட் நடிகைகள் சேர்ந்து செய்த உடற்பயிற்சி வீடியோ

இரண்டு பாலிவுட் நடிகைகள் சேர்ந்து செய்த உடற்பயிற்சி வீடியோ

சாரா அலிகான் | ஜான்வி கபூர்

ஜான்வி கபூர் மற்றும் சாரா அலிகான் இணைந்து செய்த உடற்பயிற்சி வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.

  • Share this:
பெரும்பாலான திரைபிரபலங்கள் கோடைகால பயணமாக மாலத்தீவுக்கு சென்று வருகின்றனர். அங்கு அவர்கள் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிடுகின்றனர். அந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. தமிழ் சினிமாவிலும் ஐஸ்வர்யாராஜேஷ், சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வந்தனர். இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதுமட்டுமின்றி நீச்சல்குளம் அருகே நடனமாடிய வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார். சுமார் 11 மில்லியனுக்கும் அதிகமானோர் ஜான்வி கபூரை இன்ஸ்டாகிராமில் பின் தொடரும் நிலையில் அந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் கண்டுகளித்தனர். தற்போது சாரா அலிகான் ஜான்வி கபூர் உடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பின்னணியில் ஜஸ்டின் பைபரின் பாடல் ஒலிக்க இருவரும் மும்முரமாக உடற்பயிற்சி செய்கின்றனர். 
View this post on Instagram

 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)


இரண்டு நடிகைகள் இணைந்து உடற்பயிற்சி செய்வதால் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
Published by:Sheik Hanifah
First published: