ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தங்கையின் பாசாங்கு இல்லாத நடிப்பு... குஷி கபூரை புகழ்ந்த ஜான்வி கபூர்!

தங்கையின் பாசாங்கு இல்லாத நடிப்பு... குஷி கபூரை புகழ்ந்த ஜான்வி கபூர்!

குஷி கபூர் - ஜான்வி கபூர்

குஷி கபூர் - ஜான்வி கபூர்

ஜான்வி நடிப்பில் சமீபத்தில் வெளியான மிலி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தங்கை குஷி கபூர் பாலிவுட்டில் அறிமுகமாவது குறித்து பெருமிதம் கொள்கிறார் அக்கா ஜான்வி கபூர்.

  நான்கு வருடங்களில் பல படங்களில் நடித்து, பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக மாறியிருக்கிறார் நடிகை ஜான்வி கபூர். தற்போது அவரது தங்கை குஷி கபூரும் நடிகையாக அறிமுகமாகவிருக்கிறார். அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள, ஸோயா அக்தரின் தி ஆர்ச்சீஸ் படம் மூலம் அவர் அறிமுகமாகிறார்.

  ”குஷி வெள்ளித்திரைக்கானவள் என்று நான் நம்புகிறேன்" என்று ஜான்வி தனது சகோதரியை உற்சாகப்படுத்தினார். "குஷி என் சகோதரி என்பதால் நான் இதைச் சொல்லவில்லை, அவள் அவ்வளவு இயல்பானவள் என்பதற்காக தான் இதை சொல்கிறேன்" என்றார்.

  அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா, ஷாருக்கானின் மகள் சுஹானா கான் மற்றும் பல வாரிசு புதிய முகங்கள் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கின்றனர். அவ்வாறு அறிமுகமாகும் ஒவ்வொருவரும் கேமராவின் முன் ஒரு அடையாளத்தை உருவாக்க முயற்சிப்பார்கள். இதற்கிடையே தனது தங்கையின் பாசாங்கு இல்லாத நேர்மையான நடிப்பு அவளை ரசிகர்களிடத்தில் நெருக்கமாக்கும் என நம்புகிறார் அக்கா ஜான்வி கபூர்.

  தந்தையாகப் போகும் அஜித் பட நடிகர் - குவியும் வாழ்த்துகள்!

  இதற்கிடையே ஜான்வி நடிப்பில் சமீபத்தில் வெளியான மிலி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மலையாளத் திரைப்படமான ஹெலனின் (2019) இந்தி ரீமேக் படமான இதில், குளிர்சாதனக் கிடங்கில் சிக்கி உயிருக்குப் போராடும் கதாபாத்திரத்தில் ஜான்வி நடித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Janhvi kapoor