Home /News /entertainment /

கருத்து சொல்ல தெர்மாமீட்டருடன் போஸ் கொடுத்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்!

கருத்து சொல்ல தெர்மாமீட்டருடன் போஸ் கொடுத்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்!

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர் வளர்க்கும் செல்ல நாய், அவரது கட்டிலில் உள்ள தலையணைக்கு மத்தியில் 'ஹாயாக' கிடப்பதையும், கட்டிலில் உலாவுவதையும் காட்டுகிறது.

    பெரிய அளவிலான உயிர் மற்றும் பொருளாதார சேதங்களை ஏற்படுத்திய கோவிட்-19 என்கிற பெருந்தொற்று வேறொரு பெயரின் கீழ் மீண்டும் தலைத்தூக்க தொடங்கியுள்ளது என்பதை, ஆங்காங்கே நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர, வாரயிறுதி ஊரடங்குகளின் வழியாக அறிய முடிகிறது.

    இதற்கு முன் இதை எங்கோ பார்த்தபடி இருக்கிறதே என்கிற "தேஜா வு" உணர்வு உங்களுக்குள் வந்தால், கவலை வேண்டாம், அப்படி உணர்வது நீங்கள் மட்டுமல்ல, நாட்டில் உள்ள பலரும் தான். அந்த பட்டியலில் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளும், வளர்ந்து வரும் நடிகையுமான ஜான்வி கபூரும் இணைந்துள்ளார்.

    இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட சமீபத்திய புகைப்படங்களே அதற்கு சாட்சி. குறிப்பிட்ட புகைப்படங்கள் வழியாக, ​​​​நம்மில் உள்ள பெரும்பாலானவர்களை போலவே தான் அவரும் உணர்கிறார் என்பதை வெளிப்படுத்தி உள்ளார். மொத்தம் 5 புகைப்படங்கள் மற்றும் ஒரு விடியோவை பதிவிட்டுள்ள ஜான்வி கபூர், அதற்கு "மீண்டும் அந்த ஆண்டின் அதே நேரம்" என்கிற தலைப்பையும் வைத்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)






    முதல் புகைப்படத்தில், நடிகை ஜான்வி கபூர் அவரது வாயில் தெர்மாமீட்டரை பிடித்தப்படி போஸ் கொடுக்கிறார். அதன் பிறகுள்ள இரண்டாவது புகைப்படம் அவரின் கலைத்திறனை வெளிப்படுத்தும்படி உள்ளது, ஆம்! அதிலொரு ஓவியம் காட்சிப்படுகிறது. அதன் பின் ஜான்வி கபூர் புத்தகமொன்றை படிப்பதை வெளிபடுத்தும் ஒரு புகைப்படம் உள்ளது.

    பின்னர் வரும் வீடியோவில் ஜான்வி கபூர் வளர்க்கும் செல்ல நாய், அவரது கட்டிலில் உள்ள தலையணைக்கு மத்தியில் 'ஹாயாக' கிடப்பதையும், கட்டிலில் உலாவுவதையும் காட்டுகிறது.

    இதையும் படிங்க.. மைக்கை பார்த்ததும் குஷியான பிரியங்கா!

    பின்னர் வரும் ஐந்தாவது புகைப்படமானது ஜான்வி கபூர் தன் சகோதரியான குஷி கபூருடன் அரவணைப்புடன் இருக்கும் ஒரு அழகான காட்சியை காட்டுகிறது. கடைசி புகைப்படமானது முழுக்க முழுக்க ஜான்வி கபூரின் ரசிகர்களானது, அது ஒரு அழகான செல்பீ!

    ஜான்வி கபூரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்த ரியாலிட்டி டிவி ஷோ நட்சத்திரமான மஹீப் கபூர் ஹார்ட் ஈமோஜியை பதிவிட்டுள்ளார்.

    இன்ஸ்டாகிராமில் நடிகை ஜான்வி கபூர் பதிவிட்ட புகைப்பட தொகுப்பு இதோ:

    "அந்த ஆண்டின் அதே நேரம்" என்று கூறி, கூண்டுக்குள் அடைபட்ட ஒரு பறவையாக ஜான்வி கபூர் புகைப்படங்களை போஸ்ட் செய்வதற்கு முன்னர் ஒரு பாலைவனத்தில் சூரியனுக்குக் கீழே தனது நேரத்தை மகிழ்ச்சியாக செலவழித்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

    இதையும் படிங்க.. ஓடிடி தளத்தை சப்ஸ்கிரைப் செய்தால் சினிமா டிக்கெட் இலவசம்!

    அந்த புகைப்படங்களில் ஜான்வி கபூர் மிகவும் அழகான கஃப்டான்களை அணிந்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு ஜான்வி கபூர், “நீங்கள் தரிசு நிலத்தை பார்க்கிறீர்கள்; நான் தங்க மணலைப் பார்க்கிறேன்" என்றும் தலைப்பிட்டு இருந்தார்..

    ஜான்வி கபூர் அவரின் பிரமிக்க வைக்கும் பாலைவன புகைப்படங்களை போஸ்ட் செய்வதற்கு முன், அதாவது ஷூட்டிற்கு ரெடியாகும் முன்பான புகைப்படங்களையும் பதிவிட்டார். அதில் மிகவும் வழக்கமான ஜான்வி கபூரின் 'கேமரா போஸ்'களை காணமுடிகிறது. அந்த புகைப்படங்களுக்கு ஜான்வி, "அழகாக இருப்பது போல் நடிப்பதற்கான அலைவரிசை அதிகபட்சம் 3 புகைப்படங்கள் வரை மட்டுமே நீடிக்கும்" என்று தலைப்பிட்டுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)






    அந்த புகைப்பட தொடரின் நான்காவது புகைப்படத்தில் அவர் தனது வேடிக்கையான முகத்தை காட்டுகிறார். ஜான்வி கபூர் தனது சுட்டித்தனமான  முகத்தை காட்டுவதை பற்றி பேசுகையில், அவர் சமீபத்தில் பதிவிட்ட “அக்ஸா கேங்” வீடியோவைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. கிறிஸ்மஸ் தீம் கொண்ட அந்த வீடியோவில், ஜான்வியும் அவரது நண்பர்களும் ஹிமேஷ் ரேஷம்மியா பாடலான ஐஸ்கிரீம் கவுங்கிக்கு நடனமாடுவர். அதன் தலைப்பில், "மெர்ரி கிறிஸ்துமஸ் ஃப்ரண்ட்ஸ்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

    திரைப்பட வேலைகளை பொறுத்தவரை, ஜான்வி கபூர் கடைசியாக ரூஹியில் நடித்தார். அவரது வரவிருக்கும் திட்டங்களில் குட் லக் ஜெர்ரி மற்றும் மிலி ஆகியவைகள் அடங்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bollywood, Janhvi kapoor

    அடுத்த செய்தி