நடிகை ஜனனி ஐயர் தன்னுடைய பெயரில் இருந்த ஐயர் என்ற வார்த்தையை நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். எனவே, தன்னை ஜனனி என்று அனைவரும் அழைக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளார்.
அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வேழம் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில், படத்தின் நாயகன் அசோக் செல்வனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவரை தவிர படத்தின் நாயகிகள் ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன், இயக்குனர் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
‘மாமனிதன்’ ரிலீஸ்... எம்.ஜி.ஆர், சிவாஜி, கலைஞர் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய இயக்குனர் சீனுராமசாமி !
அதில் பேசிய ஜனனி ஐயர், தான் நடிக்கும் திரைப்படங்களின் தலைப்பு தெகிடி, வேழம் என வித்தியாசமாகவே இருக்கின்றன. இது குறித்து பலர் தன்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அது எதற்காக அமைகிறது என தெரிவித்தார். மேலும் நல்ல திரைப்படங்களை ஆதரிக்க இங்கு (தமிழ் சினிமாவில்) ஆட்கள் குறைவாகவே இருக்கின்றனர். அப்படிப்பட்ட வேழம் என்ற நல்ல திரைப்படத்தை எஸ்.பி சினிமா சார்பில் கிஷோர் வெளியிட முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தன்னுடைய பெயரில் இருந்த ஐயர் என்ற வார்த்தையை நீக்க விட்டதாக தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் தலைவிரித்தாடும் வன்முறை காட்சிகள்!
இவர் பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். அதிலும் ஜனனி ஐயர் என்ற பெயரில் தமிழ் திரையில் அறிமுகமானார். இந்த நிலையில் அவரின் பெயரில் இருக்கும் குறிப்பிட்ட சமூகத்தின் பெயர் எதற்கு என சிலர் கேள்விகளை முன்வைத்தனர்.

வேழம் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு
இதையடுத்து அவர் தற்போது ஜனனி ஐயர் என்ற பெயரில் இருந்த சமூகத்தின் வார்த்தையை நீக்கி விட்டதாக தெரிவித்து இருக்கிறார். எனவே, அனைவரும் தன்னை ஜனனி என்று அழைக்கவும் வேண்டுகோள் வைத்துள்ளார். இவரைத் தவிர ஐஸ்வர்யா மேனன், வேழம் திரைப்படம் 24ஆம் தேதி வருகிறது. அதை அனைவரும் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்துடன் படத்தின் இயக்குநர் சந்தீப் நடிப்பதற்கு அதிக வாய்ப்புக் கொடுத்தார் அதற்கு நன்றி எனவும் தெரிவித்தார். வேழம் என்பது யனையை குறிக்கும் செயல் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.