ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''இதுக்குலாம் நான் பயப்படல'' - விஜய்யின் உடை கருத்துக்கு ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்!

''இதுக்குலாம் நான் பயப்படல'' - விஜய்யின் உடை கருத்துக்கு ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்!

விஜய் - ஜேம்ஸ் வசந்தன்

விஜய் - ஜேம்ஸ் வசந்தன்

இவ்வளவு பெரிய ஸ்டாரை விமர்சிச்சு பொதுவெளியில என்னைத் தவிர தமிழ்நாட்டில் ஒருத்தரும் எழுத மாட்டாங்கனு எனக்கு தெரியும். ஆனால் சொல்லியாக வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்ததுனால நான் எழுதுனேன்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.  வழக்கம்போல வாரிசு இசை வெளியீட்டிற்கு எளிமையாகவே விஜய் வந்திருந்தார். மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டின்போது மட்டும் வழக்கத்துக்கு மாறாக கோட் சூட் அணிந்து வந்தார். அந்நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய அவர், நம்ம நண்பர் அஜித் மாதிரி... என கோட் சூட் அணிந்தது குறித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில் இசையமைப்பாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் எளிமையாக வந்தது குறித்து தனது சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “வாரிசு பட விழாவில் விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது. தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழா மேடைக்கேற்ற உடையை அணிந்திருக்கலாம் என்று தோன்றியது. அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர்கள் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே? ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர் மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபட்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது. தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று என்று சுட்டிக்காட்டியுள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.

நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே என்று குறிப்பிட்டுள்ள அவர், ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லை. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான் என்றும் கூறியுள்ளார். மேலும், முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்வில் ஜேம்ஸ் வசந்தன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இவ்வளவு பெரிய ஸ்டாரை விமர்சிச்சு பொதுவெளியில என்னைத் தவிர தமிழ்நாட்டில் ஒருத்தரும் எழுத மாட்டாங்கனு எனக்கு தெரியும். ஆனால் சொல்லியாக வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்ததுனால நான் எழுதுனேன். இவ்வளவு பெரிய நட்சத்திரத்தை விமர்சித்தால், அவரது ரசிகர்கள் என்னிடம் எந்த அளவுக்கு நடந்துகொள்வார்கள் என எனக்கு தெரியாதா என்ன ? 27 வருடங்களாக தமிழ் ஊடகத்தில் இருக்கிறேன். ஆனால் எனக்கு மூத்த ஊடகவியலாளராக எனக்கு ஒரு கடமை இருக்கு. எதிர்ப்புகளை பற்றி நான் எப்பொழுதும் கவலைப்பட்டதில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Varisu