ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Avatar 2: பிரமாண்டத்தின் உச்சம்... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அவதார் 2 ட்ரைலர்!

Avatar 2: பிரமாண்டத்தின் உச்சம்... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அவதார் 2 ட்ரைலர்!

அவதார் 2

அவதார் 2

இதனை 'ரிட்டர்ன் டூ பண்டோரா' எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் வெளியிட்டுள்ளது படக்குழு.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ’அவதார் 2: தி வே ஆஃப் வாட்டர்’ ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

  ஜேம்ஸ் கேமரூனின் பிளாக்பஸ்டர் படமான அவதார் படத்தின் இரண்டாம் பாகமான அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. ஜேம்ஸ் கேமரூன் அவதார் படத்தை வெளியிட்டு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. இது எவர் கிரீன் வெற்றிப்படமாக மாறியது. தற்போது அதன் அடுத்த பாகத்தை இயக்கி முடித்துள்ளார் ஜேம்ஸ்.

  அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தை ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து ஜான் லாண்டாவ் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

  ' isDesktop="true" id="830156" youtubeid="d9MyW72ELq0" category="cinema">

  இன்று மாலை வெளியாகும் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ - கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை 'ரிட்டர்ன் டூ பண்டோரா' எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் வெளியிட்டுள்ளது படக்குழு. பிரமாண்டத்திற்கு பஞ்சமில்லாத இந்த ட்ரைலரைப் பார்த்த ரசிகர்கள் திரையில் படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அதனை டிசம்பர் 16-ம் தேதி திரையில் பார்க்கலாம்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Hollywood