ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உலகளவில் 5000 கோடி வசூலை நெருங்கும் அவதார்: தி வே ஆஃப் வாட்டர்!

உலகளவில் 5000 கோடி வசூலை நெருங்கும் அவதார்: தி வே ஆஃப் வாட்டர்!

அவதார் 2

அவதார் 2

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேமுக்கு அடுத்தபடியாக, வெளியான முதல் நாளான வெள்ளிக்கிழமை ரூ.41 கோடி வசூலித்து இந்தியாவின் இரண்டாவது பெரிய ஹாலிவுட் ஓப்பனர் ஆனது அவதார் 2.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் உலகளவில் 5,000 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் இந்திய பாக்ஸ் ஆபிஸில் தனது முதல் வாரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த சயின்ஸ் வெளியான முதல் வாரத்தில் இந்தியாவில் ரூ. 200 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 193 கோடி வசூலித்துள்ளது.

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேமுக்கு அடுத்தபடியாக, வெளியான முதல் நாளான வெள்ளிக்கிழமை ரூ.41 கோடி வசூலித்து இந்தியாவின் இரண்டாவது பெரிய ஹாலிவுட் ஓப்பனர் ஆனது அவதார் 2. எண்ட்கேம் முதல் நாளில் ரூ. 53 கோடி வசூல் செய்து, ரூ.373 கோடியுடன் இந்திய ஓட்டத்தை முடித்துக் கொண்டது. அவதார் 2 திரைப்படத்தைப் பொறுத்தவரை சனிக்கிழமை ரூ.42 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ.47 கோடியும், திங்கள்கிழமை ரூ.18.5 கோடியும், செவ்வாய்கிழமை ரூ.16.5 கோடியும், புதன்கிழமை ரூ.15 கோடியும், வியாழன் அன்று ரூ.14 கோடியும் வசூலித்துள்ளது.

வார இறுதியில் அவதார் 2 படத்தின் கலெக்‌ஷன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இப்படம் தற்போது இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியிருக்கும் நகைச்சுவைப் படமான சர்க்கஸ் படத்துடன் பாக்ஸ் ஆபிஸில் மோதுகிறது. மேலும் பூல் புலையா 2 படத்தின் வசூலை அவதார் 2, ஏற்கனவே முந்தியுள்ளது. அதோடு த்ரிஷ்யம் 2, பிரம்மாஸ்திரா மற்றும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படங்களின் வாழ்நாள் வசூலை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவைகளின் மொத்த வசூலி 220 - 260 கோடிக்குள் அடங்கும்.

புதிய போஸ்டருடன் வாரிசு படத்தின் அட்டகாச அப்டேட்... மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

உலகளவில், அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் ஏற்கனவே வெளியான ஒரு வாரத்திற்குள் பாக்ஸ் ஆபிஸில் $600 மில்லியனுக்கும் (இந்திய மதிப்பில் 4,970 கோடி) அதிகமாக வசூலித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Avatar