• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • No Time to Die - அதிக நேரம் ஓடும் ஜேம்ஸ் பாண்ட் படம்!

No Time to Die - அதிக நேரம் ஓடும் ஜேம்ஸ் பாண்ட் படம்!

நோ டைம் டூ டைய்

நோ டைம் டூ டைய்

படம் போரடிக்குமோ என்ற கவலை வேண்டாம். இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்களாம். படத்தின் ட்ரெய்லரே அதற்கு சாட்சி.

  • News18
  • Last Updated :
  • Share this:
இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் படங்களைவிட செப்டம்பர் 30 வெளியாகும் நோ டைம் டூ டைய் படத்தின் ரன்னிங் டைம் அதிகம். சுமார் 2 மணி 43 நிமிடங்கள்.

ஆங்கிலப் படங்கள் என்றால் பெரும்பாலும் இரண்டு மணி நேரத்துக்குள் முடிந்துவிடும். அதிகம் போனால் இரண்டேகால் மணி நேரம். விதிவிலக்காக பல படங்கள் உண்டு. எனினும், ஆக்ஷன் படங்கள் இந்த எல்லைக் கோட்டை தாண்டுவதில்லை. முக்கியமாக ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள்.

ஸ்கை ஃபால் திரைப்படத்தில் இந்த விதி மாறியது. அந்தப் படம் சுமார் 2 மணி, 23 நிமிடங்கள் ஓடியது. அதையடுத்து வெளியான ஸ்பெக்டர் திரைப்படம் 2 மணி 26 நிமிடங்கள் ஓடியது. ஸ்கை ஃபாலைவிட அதிகம். செப்டம்பர் 30 வெளியாகப் போகிற நோ டைம் டூ கில் 2 மணி 43 நிமிடங்கள்.

Also read... திரையரங்குகளில் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது படங்களில் ரிலீஸ்...!

படம் போரடிக்குமோ என்ற கவலை வேண்டாம். இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்களாம். படத்தின் ட்ரெய்லரே அதற்கு சாட்சி. இந்தப் படம் செப்டம்பர் 28 சுவிட்சர்லாந்தின் சூரிச் திரைப்பட விழாவில் முதல்முறையாக திரையிடப்படுகிறதுஅதேநாள் லண்டனில் இதன் ப்ரீமியர் ஷோ நடத்தப்படுகிறது. செப்டம்பர் 29 ஆம் தேதி பெல்ஜியம், சுவிட்சர்லாந்த், தென் கொரியா, மொனாகோ போன்ற சில நாடுகளில் வெளியாகிறது. செப்டம்பர் 30 இந்தியா உள்பட பெரும்பான்மையான நாடுகள்



ஆரம்பத்தில் அக்டோபர் 8 யுஎஸ்ஏ யில் வெளியாகிற அன்றே இந்தியாவிலும் திரையிடுவதாக இருந்தது. அதனை மாற்றி இப்போது செப்டம்பர் 30 ஆம் தேதியை இந்தியாவில் வெளியிடுகிறார்கள். இந்த வருடத்தின் வசூல் சாதனைகளை நோ டைம் டூ டை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: